Connect with us

விளையாட்டு

பாதுகாப்பு காரணங்களுக்காக IPL தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Published

on

Loading

பாதுகாப்பு காரணங்களுக்காக IPL தொடர் தற்காலிகமாக இடைநிறுத்தம்

இந்தியா- பாகிஸ்தான் இடையில் போர் பதற்றம் நிலவி வருகிறது. நேற்றிரவு ஜம்மு விமான நிலையத்தை குறிவைத்து பாகிஸ்தான் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 

இதனால் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், அரியானா, குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின. விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டன.

Advertisement

இதனால் தரம்சாலாவில் நேற்றிரவு நடைபெற்று வந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான போட்டி உடனடியாக நிறுத்தப்பட்டது. அத்துடன் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதல் மேலும் மேலும் மோசமடைந்து வருவதால் ஐபிஎல் போட்டியில் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக இன்று காலை பிசிசிஐ தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் ஒருவார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. பிசிசிஐ இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஐபிஎல் தொடர் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

Advertisement

இந்த சஸ்பெண்ட் ஒரு வார காலத்திற்கு இருக்கும்.

அதன்பின் சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய்ந்து புதிய போட்டி அட்டவணை மற்றும் போட்டிகள் நடைபெறும் இடம் அறிவிக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளது.

லங்கா4 (Lanka4)

Advertisement

அனுசரணை

images/content-image/1746819634.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன