சினிமா
“பாரியும் நோக்கினான்..” ரெட்ரோ திரைப்பட வீடியோ பாடல் வெளியீடு..!

“பாரியும் நோக்கினான்..” ரெட்ரோ திரைப்பட வீடியோ பாடல் வெளியீடு..!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ ” திரைப்படம் மே மாதம் முதலாம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வெற்றி நடைபோட்டு வருகின்றது . இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், நாசர், பிரகாஷ் ராஜ், கருணாகரன், நந்திதா தாஸ் என பலர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2d நிறுவனம் தயாரித்துள்ளதுடன் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இது வரை தனது தனித்துவமான கதைகளால் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், ‘ரெட்ரோ’ படத்தில் சூர்யாவுடன் இணைந்துள்ளார். இது அவர்களது முதல் கூட்டணியாகும். இந்த கூட்டணியின் முதல் அறிவிப்பே ரசிகர்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்த நிலையில் தற்போது இப் படத்தின் “எதற்காக மறுபடி ” எனும் பாடலின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை கார்த்திக் சுப்புராஜ் தனது சமூக வலைத்தள பக்கங்களில் “பாரியும் நோக்கினான்!!” என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார். வீடியோ இதோ..