சினிமா
ஹனிமூன் சென்ற இடத்தில் நடிகை அபிநயா செய்ததை பாருங்க.. போட்டோ வைரல்

ஹனிமூன் சென்ற இடத்தில் நடிகை அபிநயா செய்ததை பாருங்க.. போட்டோ வைரல்
சமுத்திரக்கனி இயக்கத்தில் சசி குமார் நடிப்பில் உருவான நாடோடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் அபிநயா.இப்படத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றார். இதை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், ஈசன், ஜீனியஸ், வீரம், பூஜை, மார்க் ஆண்டனி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.சமீபத்தில், நடிகை அபிநயா தனது 15 வருட காதலரான சன்னி வர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு தனது கணவருடன் ஹனிமூனுக்கு லண்டன் சென்றுள்ளார் அபிநயா.இந்நிலையில், லண்டனில் உள்ள ஆக்வா ஷார்ட் ரெசார்ட்டில் அபிநயா தனது கணவருடன் ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளார்.அப்போது அங்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் நடிகர் ராம்சரண் ஆகியோரை சந்தித்துள்ளார். தற்போது அங்கு எடுத்துக்கொண்ட போட்டோவை பகிர்ந்து அவரது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.