இந்தியா
குறைந்த விலையில் ஐபோன் தருவதாக கூறி மோசடி: புதுச்சேரியில் 2 வாலிபர்கள் கைது

குறைந்த விலையில் ஐபோன் தருவதாக கூறி மோசடி: புதுச்சேரியில் 2 வாலிபர்கள் கைது
ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போன்களை 7000 ரூபாய்க்கு, 8000 ரூபாய்க்கு தருகிறேன், என்று ஆசை வார்த்தை கூறி சுமார் 100-க்கும் மேற்பட்டோரை ஏமாற்றிய மூன்று தங்கப்பதக்கங்களை வென்ற விளையாட்டு வீரர் உள்பட 2 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.பணம் செலுத்திய உடன் கொரியரில் போன் உங்கள் விலாசத்திற்கு அனுப்பப்படும் என்று வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் இன்ஸ்டாகிராமில் (Instagram) விளம்பரம் செய்துள்ளனர். இதனை நம்பிய நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு செல்போனை கொடுக்காமல் ஏமாற்றி வந்தனர் .ஏமாற்றியது மட்டுமில்லாமல் பணத்தை திருப்பி கேட்ட இளைஞரிடம் முடிந்தால் என்னை நெருங்கிப்பார் நான் மிகவும் பாதுகாப்பான வளையத்திற்குள் இருக்கின்றேன் என வாய்ஸ் மெசேஜ் அனுப்பி சவால் விட்ட திருச்சி மற்றும் புதுச்சேரியைச் சார்ந்த 2 நபர்களை புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.இதற்கு மூளையாக செயல்பட்ட திருச்சி ஆவணியாபுரத்தைச் சேர்ந்த சஜித் அகமது என்பவர், அவருக்கு கூட்டாளியாக செயல்பட்ட புதுச்சேரி சேர்ந்த மாதேஷ் (22) போலீசார் கைது செய்துள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த மாதேஷ் 6 மொழிகள் சரளமாக பேசும் அளவிற்கு திறமை கொண்டவர் இவர் தேக்குவண்டா விளையாட்டில் மூன்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.அவர்களுடைய செல்போன் எண்களை வைத்து நேஷனல் சைபர் கிரைம் போர்டல் (NCRP) மூலமாக சோதனை செய்தபோது 43 புகார்கள் அவர்கள் மீது இதுவரை பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. மோசடிக்கு பயன்படுத்த அவர்களுடைய நண்பர்களுடைய வங்கி கணக்கை உபயோகப்படுத்த இது சம்பந்தமாக வங்கி கணக்கை கொடுத்து உதவிய அவர் நண்பர்களையும் விசாரிக்க இணைய வழி போலீசார் முடிவு செய்துள்ளனர். .