Connect with us

இலங்கை

தீயில் கருகி மர்மமான முறையில் உயிரிழந்து யுவதி: பொலிஸார் தீவிர விசாரணை

Published

on

Loading

தீயில் கருகி மர்மமான முறையில் உயிரிழந்து யுவதி: பொலிஸார் தீவிர விசாரணை

19 வயது யுவதி ஒருவர் தனது வீட்டில் தீயில் கருகி உயிரிழந்தமை தொடர்பிலான மர்மமான மரணம் குறித்து கொட்டாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 சம்பவத்தின் போது வீட்டில் தனியாக இருந்த திருமணமாகாத இளம் பெண்ணான புடமினி துரஞ்சா என்பவரே உயிரிழந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். 

Advertisement

பொலிஸாரின் கூற்றுப்படி, அவரது உடல் முற்றிலுமாக கருகியுள்ளதுடன், கூரை உட்பட வீட்டின் சில பகுதிகளும் தீயில் சேதமடைந்துள்ளன.

 சம்பவம் நடந்தபோது உயிரிழந்தவரின் தாயும் இரு சகோதரர்களும் வெசாக் கூடுகள் பார்க்க வெளியே சென்றிருந்ததாக கூறப்படுகிறது.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை தீயணைப்பு படையினரும், பிரதேச மக்களும் இணைந்து தீயை அணைத்தனர். 

எனினும், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அந்த இளம் பெண் உயிரிழந்துவிட்டார்.
தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1746915357.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன