நக்கீரன் செய்திப்பிரிவு

Photographer

Published on 13/05/2025 | Edited on 13/05/2025

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் கடந்த மாதம் 14ஆம் தேதி வெளியான படம் ‘டூரிஸ்ட் ஃபேமிலி'(Tourist Family).மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்திருந்த இப்படத்தில் யோகி பாபு, மிதுன் ஜெய் சங்கர், கமலேஷ், எம். எஸ். பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருந்த இப்படம் இலங்கையைச் சேர்ந்த ஒரு தமிழ் குடும்பம் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்து சந்திக்கும் சவால்களை காமெடி கலந்து பேசியிருந்தது. 

இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அமைச்சர் மா.சுப்பிரமணியன், ரஜினி, சிவகார்த்திகேயன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட பலர் இப்படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து எழும் பாராட்டால், படத்திற்கு கூடுதல் காட்சிகளும் கூடுதல் திரைகளும் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Advertisement

நிகழ்வில் சிம்ரன் பேசியதாவது, “நான் கதை கேட்டதுமே படம் சூப்பர் ஹிட் ஆகுமென சொன்னேன். அதோடு கண்டிப்பாக நடித்து விட வேண்டும் என்றும் முடிவெடுத்தேன். அபியின் அறிமுக படத்தில் நானும் ஒரு அங்கமாக இருந்ததில் பெருமை கொள்கிறேன். சசிகுமார் இலங்கை தமிழ் சொல்லி கொடுத்தார். இந்த படக்குழுவினருடன் நடித்திருந்தது என்னை யூத்தாக ஃபீல் பண்ண வைத்தது. 20 வருஷத்துக்கு அப்புறம் இந்த மாதிரி ரோலில் நடித்தது, பழைய சிம்ரனை உருவாக்கியது போல் இருந்தது” என்றார்.