Connect with us

இலங்கை

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆனையிறவு தொழிற்சாலை ஊழியர்கள்

Published

on

Loading

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆனையிறவு தொழிற்சாலை ஊழியர்கள்

ஆனையிறவு தொழிற்சாலையில் தேசிய உப்பு
பணிபுரியும் ஊழியர்கள் பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இன்றையதினம்
கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.

தங்களுக்கு உரிய
முறையில் தொழில் வழங்கப்பட வேண்டும் எனவும், ஊழியர் நலன்புரி சேவைகள்
மேம்படுத்தப்பட வேண்டும், சீருடைகள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் வழங்கப்பட
வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

இங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற உப்பினை
ஹம்பாந்தோட்டை, மன்னார், புத்தளம் உள்ளிட்ட பகுதிகளுக்குக் கொண்டு சென்று
அங்கு வைத்து பொதியிட்ட பின்னர் மீண்டும் தங்களது பகுதிகளுக்குக் 
கொண்டுவந்து விநியோகம் செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் இரட்டை போக்குவரத்து செலவு காரணமாக உப்பின் விலையை அதிகரித்து விற்பனை செய்கின்றனர்.
எமது
பகுதியில் விளையும் உப்பினை இங்கேயே வைத்து பொதியிடக்கூடிய வசதி
இருந்தும், வெளி மாவட்டங்களுக்குக் கொண்டு சென்று பொதியிடப்படுவதாகவும்
குற்றம் சுமத்தியுள்ளனர்.

அவர்கள் அத்துடன், ஆனையிறவு உப்பு
தொழிற்சாலை அரச நிறுவனம் என்ற போதிலும் ஊழியர்களுக்கு எதிராக அதன்
நிர்வாகம் பல அடக்குமுறைகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிடுகின்றனர்.

Advertisement

அவர்கள்
அதேநேரம், அரசாங்கம் இங்குள்ள ஊழியர்களுக்கு பல சலுகைகளையும்
நிவாரணங்களையும் வழங்குவதாக உறுதியளித்த போதிலும் இதுவரையில் அவை
வழங்கப்படவில்லை எனவும் ஆனையிறவு தேசிய உப்பு தொழிற்சாலைஊழியர்கள்
தெரிவிக்கின்றனர்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1747261237.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன