சினிமா
சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண யோகஸ்ரீ!! சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு வார்த்தை..

சரிகமப டைட்டிலை மிஸ் பண்ண யோகஸ்ரீ!! சிவகார்த்திகேயன் சொன்ன ஒரு வார்த்தை..
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வந்த நிகழ்ச்சி சரிகமப லிட்டில் சாம்ஸ் 4. விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த இந்நிகழ்ச்சியில் 6 பேர் இறுதி சுற்று போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டனர்.ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, திவினேஷ், அபினேஷ், மஹதி உள்ளிட்ட 6 பேர் இறுதி சுற்று போட்டிக்கு தயாராகி, மே 11 ஆம் தேதி மாலை 4.30 மணியில் இருந்து நேரு ஸ்டேடியத்தில் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 Grand Finale நிகழ்ச்சியில் சிறப்பாக பாடினர். வகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இறுதி சுற்றுப்போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார்.சிறப்பாக பாடி அசத்திய திவினேஷ் சரிகமப லிட்டில் சாம்ஸ் 4 டைட்டில் வின்னராக சிவகார்த்திகேயனால் அறிவிக்கப்பட்டார். மேலும் இரண்டாம் இடம் யோகஸ்ரீயும், 3வது இடம் ஹேமித்ராவும் பிடித்தனர்.இந்நிலையில் சிவகார்த்திகேயன் இறுதி சுற்று போட்டியாளர்களிடம் பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் யோகஸ்ரீயின் திறமையை பற்றி அனிருத்திடம் சொல்லுங்க என்று தொகுப்பாளினி அர்ச்சனா சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன், அனிருத் மட்டுமில்லை எல்லா இசையமைப்பாளர்களிடமும் சொல்லி இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.