இலங்கை
தினமும் காலை உணவில் கேழ்வரகு சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா?

தினமும் காலை உணவில் கேழ்வரகு சேர்ப்பதால் இத்தனை நன்மைகளா?
காலை உணவு என்பது நம் வாழ்க்கையில் மிக முக்கியமான உணவு ஆகும். காலை உணவை சாப்பிடும் போது நாள் முழுவதும் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
அதற்கு ஏற்ற உணவுகளை நாம் தேடி சாப்பிடும் போது உடலின் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்காததாக இருக்க வேண்டும். அந்த வகையில் தினமும் நாம் காலை உணவாக கேழ்வரகு சாப்பிடுவது சிறந்த ஒன்றாக இருக்கும்.
இதை காலை உணவாக சேர்ப்பதன் மூலம் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.
இன்றைய காலகட்டத்தில், பலரும் சந்திக்கும் பொதுவான உடல்நலப் பிரச்சனைகளில் ஒன்று அதிக கொலஸ்ட்ரால். கேழ்வரகு கொலஸ்ட்ராலைக் குறைத்து, இரத்தத்தின் தரத்தை மேம்படுத்த உதவுகிறது. ராகி கல்லீரலில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைத்து, கொழுப்பு உருவாகுவதைத் தடுக்கிறது. இதனால் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து குறைகிறது. மேலும் இவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சோகை நோய்களைத் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு கட்டுப்படுத்த முடியாத நோயாளிகள், ராகியை காலை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ராகி சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக ஏறாது. இது குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டது.இது அதிக நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால் கொண்டது. ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும். அதிக சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட நீரிழிவு நோயாளிகள் கேழ்வரகை சேர்க்கலாம். உண்மையில் இது ஒரு வரப்பிரசாதம்
ராகி கால்சியத்தின் சிறந்த ஆதாரம். இது எலும்பு வளர்ச்சிக்கு சிறந்தது. குறிப்பாக குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள், மற்றும் வயதானவர்களுக்கு இது மிகவும் நல்லது. எலும்பு வலுவிழப்பைத் தடுக்கவும், எலும்பை உறுதியாக வைக்கவும் இது உதவுகிறது. குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு இது அவசியம். எலும்பு தேய்மானம் தவிர்த்து, அடர்த்தியை மேம்படுத்தி எலும்பை பலமாக வைக்கிறது.