சினிமா
மகாநதி சீரியல் வெண்ணிலா வீட்டில விசேஷம்; குவிந்த பிரபலங்கள்.! வைரலாகும் வீடியோ…

மகாநதி சீரியல் வெண்ணிலா வீட்டில விசேஷம்; குவிந்த பிரபலங்கள்.! வைரலாகும் வீடியோ…
விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் தற்போது பார்வையாளர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்று பரபரப்பாக ஓடிக்கொண்டு இருக்கும் தொடர் தான் மகாநதி. தினசரி இரவு நேரங்களில் ஒளிபரப்பாகும் இந்தத் தொடர், குடும்பம், காதல், தாய்மை மற்றும் தியாகம் என அனைத்து உணர்வுகளும் கலந்த ஒரு பரிணாம கதைக் களத்துடன் மெருகூட்டப்பட்டு வருகின்றது.இந்த தொடரின் தற்போதைய முக்கிய அம்சம், விஜய் – வெண்ணிலா திருமணத்திற்கான கதைக்களமே. இந்த மாறுதலான சூழ்நிலைகளில், சீரியலில் முக்கிய கதாப்பாத்திரமான வெண்ணிலாவாக நடித்துவரும் நடிகை வைஷாலி, வாழ்க்கையின் புதிய கட்டத்தை சந்தித்துள்ளதனை வீடியோ மூலம் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். நடிகை வைஷாலி சமீபத்தில் தான் கர்ப்பமாக இருக்கிறேன் என இன்ஸ்டாகிராம் மூலமாக அறிவித்திருந்தார். இது அவரது ரசிகர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. குடும்ப வாழ்க்கையை அனுபவித்து வரும் வைஷாலிக்கு, தற்போது ஐந்தாவது மாதம் நிறைவடைந்த நிலையில், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு ஒரு அழகான வளைகாப்பு விழாவினை நடத்தியுள்ளனர்.இந்த விழாவின் நிகழ்வுகள், அலங்காரங்கள், பாரம்பரிய உடைகள் மற்றும் சந்தோஷம் பொங்கும் சூழ்நிலையைப் பிரதிபலிக்கும் வீடியோவை வைஷாலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில், வைஷாலி சிவப்பு மற்றும் நீலம் கலந்த பாரம்பரிய புடவையில் மிக அழகாக அலங்கரிக்கப்பட்டு, புன்னகையுடன் காணப்படுகின்றார். இந்த வீடியோவை பார்த்தவுடன், சமூக வலைத்தளங்களில் வைஷாலிக்கு வாழ்த்துக்கள் குவிந்துள்ளன. சிறந்த நடிகையான வைஷாலி, தனது தனிப்பட்ட வாழ்க்கையின் முக்கியமான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார் என்பதிலேயே அவரது சிறப்பான மனப்பான்மையை உணரமுடிகிறது.