Connect with us

இலங்கை

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு தாக்குதல்

Published

on

Loading

மட்டக்களப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவருக்கு தாக்குதல்

மட்டக்களப்பு – கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குடும்பிமலை பகுதியில் வைத்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் இனந்தெரியாதவர்களினால் இன்றையதினம் தாக்கப்பட்டுள்ளார்.

 மட்டக்களப்பு கல்லடி திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த சிவில் சமூக செயற்பாட்டாளர் செல்வகுமார் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

Advertisement

 இன்று காலை குடும்பிமலைப் பிரதேசத்தில் வைத்து வழி மறித்த நால்வர் அருகில் இருந்த பற்றைக் காட்டிற்குள் இழுத்துச் சென்று கைகளை பின்னால் கட்டிய நிலையில் மிக மோசமான முறையில் சரமாரியாக கையாளும் தடியாலும் தாக்கியுள்ளனர்.

 குடும்பிமலைப் பிரதேசத்தில் இன்றையதினம் முள்ளிவாய்க் கால் கஞ்சி வழங்குவதற்கு ஏற்பாடாகி இருந்த நிலையில் ஏற்பாட்டாளர்களில் ஒருவருடைய தாயார் காலமானதன் காரணத்தினால் மேற்படி நிகழ்வினை நடாத்த முடியாமல் போனது.

 இதன் காரணத்தை குடும்பிமலைக் கிராமத்திற்குச் சென்று உரியதரப்பினரிடம் தெரிவித்து விட்டு வருவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். 

Advertisement

 செல்லும் வழியில் தரவை இராணுவமுகாமிற்கும் ஐந்தாம் கட்டை சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்குமிடையில் வழி மறிக்கப்பட்டுள்ளார்.

 இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நால்வர், அரைகுறைத் தமிழில்,nமுள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது தொடர்பான கேள்விகளைக் கேட்டு, மிக மோசமாக தாக்கியதாக சிவில் சமூக செயற்பாட்டாளர் தெரிவித்தார்.

 இதன்போது அவரின் மோட்டார் சைக்கிளும் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement

தாக்குதல்தாரிகள் அவ்விடத்தை விட்டுச் சென்றதும் அந்த வழியால் வந்த சிலரால் காப்பாற்றப்பட்டு சந்திவெளி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement

images/content-image/1747175441.jpg

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன