விளையாட்டு
மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல் 2025: பிளே -ஆஃப்க்கு தகுதி பெற 7 அணிகளும் என்ன செய்யணும்?

மீண்டும் தொடங்கும் ஐ.பி.எல் 2025: பிளே -ஆஃப்க்கு தகுதி பெற 7 அணிகளும் என்ன செய்யணும்?
10 அணிகள் பங்கேற்ற இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வந்தது. இதனிடையே, இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. தொடர் ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தர்மசாலாவில் நடந்த பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் இடையிலான ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது.இந்நிலையில், போர்ப்பதற்றம் தணிந்ததை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் (பி.சி.சி.ஐ.) ஐ.பி.எல். போட்டி வருகிற சனிக்கிழமை (மே.17) முதல் மீண்டும் தொடங்கி நடைபெறும் என அறிவித்துள்ளது. அன்றைய தினம் இரவு 7:30 மணிக்கு பெங்களூருவில் நடக்கும் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்நிலையில், நடப்பு தொடரில் இதுவரை எந்த அணியும் இன்னும் பிளேஆஃப்க்கு தகுதி பெறவில்லை. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத் அணிகள் தொடரில் பிளேஆஃப்க்கு தகுதி பெறுவதில் இருந்து வெளியேறியுள்ளன. அதேநேரத்தில், குஜராத், பெங்களூரு, பஞ்சாப், மும்பை, டெல்லி, கொல்கத்தா, லக்னோ ஆகிய 7 அணிகள் பிளே-ஆஃப்க்கு செல்லும் போட்டியில் உள்ளன.ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 restart, Playoffs qualification scenario: What 7 teams in contention need to qualify from remaining matchesமீதமுள்ள 17 போட்டிகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய இடங்களுக்கு மாற்றப்பட்டதால், சில அணிகளின் ஆட்டம் சொந்த மைதானத்தில் இடம் பெறாமல் போகும், குறிப்பாக இந்த ஆட்டங்கள் ஆறு நகரங்களுக்குள் மட்டுமே நடக்கவுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே-ஆஃப்க்கு தகுதி பெறும் தருவாயில் இருந்தாலும், அடுத்த வாரத்தில் அதற்கான போட்டி இன்னும் தீவிரமாகலாம் என்று தெரிகிறது. குஜராத் டைட்டன்ஸ் – 16 புள்ளிகள்சிறந்த சாத்தியமான முடிவு: 22 புள்ளிகள்நடப்பு தொடரின் லீக் சுற்று முடிவில் நான்கு அணிகள் மட்டுமே 18 புள்ளிகளை எட்ட வாய்ப்புள்ள நிலையில், குஜராத் இந்த ஆண்டு பிளேஆஃப்க்கு செல்ல மீதமுள்ள 3 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வென்றால் போதும். மீதமுள்ள ஆட்டங்கள்: டெல்லி, லக்னோ, சென்னை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருசிறந்த சாத்தியமான முடிவு: 22 புள்ளிகள்குஜராத் அணியைப் போலவே, பெங்களூரு அணியும் 18 புள்ளிகளைப் பெற இன்னும் ஒரு வெற்றி மட்டுமே தேவை. பெங்களூரு அணிக்கு இன்னும் இரண்டு சொந்த மைதான ஆட்டங்கள் மீதமுள்ளன. அதனால், மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றிகளைப் பெற்றால் அந்த அணிக்கு முதல் 2 இடங்களைப் பிடிக்கும் வாய்ப்புள்ளது. மீதமுள்ள ஆட்டங்கள்: கொல்கத்தா, ஐதராபாத், லக்னோ பஞ்சாப் கிங்ஸ்சிறந்த சாத்தியமான முடிவு: 21 புள்ளிகள்டெல்லி அணிக்கு எதிரான ஆட்டம் மீண்டும் நடத்தப்பட உள்ளதால், பஞ்சாப் அணிக்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு தங்களது முதல் பிளேஆஃப் இடத்தை உறுதி செய்ய வாய்ப்புள்ளது. அவர்கள் மீதமுள்ள 3 ஆட்டங்களில் இரண்டு வெற்றிகளைப் பெற வேண்டும்.மீதமுள்ள ஆட்டங்கள்: ராஜஸ்தான், டெல்லி, மும்பைமும்பை இந்தியன்ஸ்சிறந்த சாத்தியமான முடிவு: 18 புள்ளிகள்குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் கடைசி பந்தில் தோல்வியடைந்த மும்பை அணி, மற்றொரு லீக் நிலை போட்டியில் தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழக்கும் மீதமுள்ள ஆட்டங்கள்: குஜராத், பஞ்சாப், டெல்லி 11 ஆட்டங்களில் 13 புள்ளிகளுடன், 18 புள்ளிகள் கொண்ட கட்-ஆஃப்டை கடக்க டெல்லி அணி மீதமுள்ள அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற வேண்டும். ஒரு ஆட்டத்தில் அவர்கள் நழுவினாலும், அந்த அணி பிளேஆஃப் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் உள்ளது.மீதமுள்ள ஆட்டங்கள்: குஜராத், மும்பை, பஞ்சாப் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்சிறந்த சாத்தியமான முடிவு: 15 புள்ளிகள்தேவையான கட்-ஆஃப் புள்ளியான 15 புள்ளிகளைப் பெற அவர்களுக்கு சிறிய வாய்ப்பு தான் உள்ளது கொல்கத்தா அணி போட்டியில் நீடிக்க மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டும். அந்த இரண்டு ஆட்டங்களிலும் வென்றால், பஞ்சாப் மூன்றிலும் தோல்வியடைய வேண்டும். மேலும், டெல்லி பஞ்சாபை வீழ்த்தி மற்ற அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியடைய வேண்டும்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்சிறந்த சாத்தியமான முடிவு: 16 புள்ளிகள்மூன்று ஆட்டங்கள் கையில் இருப்பதால், மற்ற பல முடிவுகள் அவர்கள் வழியில் சென்றால் லக்னோ பிளேஆஃப்களுக்குள் நுழைய முடியும். ரிஷப் பண்ட் தலைமையிலான அணி மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால், தகுதி பெற மும்பை மற்றும் டெல்லி அணி ஒன்றுக்கு மேற்பட்ட ஆட்டங்களில் வெற்றி பெறாமல் இருக்க வேண்டும்.மீதமுள்ள ஆட்டங்கள்: ஐதராபாத், குஜராத், பெங்களூரு