Connect with us

இலங்கை

17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் வைப்பு;பெருமிதம் கொள்ளும் பெற்றோர் !

Published

on

Loading

17 பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் வைப்பு;பெருமிதம் கொள்ளும் பெற்றோர் !

  பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை தொடா்ந்து, உத்தர பிரதேசத்தில் 17 பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு ‘சிந்தூா்’ எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன.

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில், சுற்றுலாப் பயணிகள் மீது   பயங்கரவாதிகள் ஏப். 22 ஆம் திகதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 26 போ் உயிரிழந்தனா்.

Advertisement

இதனையடுத்து மே 7 ஆம் திகதி இந்திய ஆயுதப் படைகள் பாகிஸ்தான் மீது தாக்குதல் மேற்கொண்டன. இந்தத் தாக்குதலுக்கு ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்று பெயரிடப்பட்டது.

இதைத் தொடா்ந்து, உத்தர பிரதேச மாநிலம் குஷிநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மே 10, 11-ஆம் திகதிகளில் பிறந்த 17 பெண் குழந்தைகளுக்கு சிந்தூா் எனப் பெயா் சூட்டப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வா்   தெரிவித்தாா்.

  பெண் குழந்தைகளின் தாயார் ஒருவர் கூறுகையில்,

Advertisement

 ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டதை எண்ணி பெருமிதம் கொள்கிறோம். சிந்தூா் என்பது வாா்த்தை மட்டுமல்ல, அது ஆழமான உணா்வாகும். எனவே , எனது மகளுக்கு சிந்தூா் எனப் பெயரிட முடிவு செய்தேன் என கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன