வணிகம்
ரூ. 5 லட்சம் டெபாசிட்… ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரிட்டன்; அதுவும் இத்தனை வருசத்துல: போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தை செக் பண்ணுங்க!

ரூ. 5 லட்சம் டெபாசிட்… ரூ. 2 லட்சத்துக்கு மேல் ரிட்டன்; அதுவும் இத்தனை வருசத்துல: போஸ்ட் ஆபிஸின் இந்த திட்டத்தை செக் பண்ணுங்க!
வங்கிகளைப் போலவே, அஞ்சல் அலுவலகங்களிலும் சேமிப்புக் கணக்குகள், ஃபிக்சட் டெபாசிட் (FD) கணக்குகள், ரெக்கரிங் டெபாசிட் (RD) கணக்குகள் போன்ற சேமிப்புத் திட்டங்கள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், அஞ்சல் அலுவலகம் தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளை விட அதிக வட்டி வழங்குகிறது என்பதை நீங்கள் அறிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். இன்று, வங்கிகளை விட அதிக வட்டி மட்டுமல்லாமல், அரசாங்கத்தின் முழுப் பாதுகாப்பையும் பெறும் ஒரு அஞ்சல் அலுவலக திட்டம் குறித்து காணலாம். இந்த திட்டத்தை டைம் டெபாசிட் (TD) என்று அழைக்கின்றனர்.அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டம், வங்கிகளின் ஃபிக்சட் டெபாசிட் திட்டத்தைப் போன்றது. டைம் டெபாசிட் கணக்கில் ஒரு குறிப்பிட்ட தொகை, மொத்தமாக டெபாசிட் செய்யப்படுகிறது. அதற்கு உங்களுக்கு அதிக வட்டி கிடைக்கும். அஞ்சல் அலுவலகத்தில், நீங்கள் ஓராண்டு, 2 ஆண்டுகள், 3 ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் வரை டைம் டெபாசிட் கணக்கைத் திறக்கலாம். இந்த வெவ்வேறு கால அளவிலான டைம் டெபாசிட் கணக்குகளுக்கு அஞ்சல் அலுவலகம் முறையே 6.9 சதவீதம், 7 சதவீதம், 7.1 சதவீதம் மற்றும் 7.5 சதவீதம் வட்டி விகிதங்களை வழங்குகிறது. 5 ஆண்டு டைம் டெபாசிட் கணக்கில், அஞ்சல் அலுவலகம் அதிகபட்சமாக 7.5 சதவீதம் வட்டி விகிதத்தை வழங்குகிறது. டைம் டெபாசிட் கணக்கை ரூ. 1000 முதல் தொடங்க முடியும். அதே நேரத்தில் அதில் அதிகபட்ச டெபாசிட் வரம்பு எதுவும் இல்லை. அதாவது, நீங்கள் விரும்பிய அளவு பணத்தை அதில் டெபாசிட் செய்யலாம்.ரூ. 5 லட்சம் டெபாசிட் செய்தால், ரூ. 2.25 லட்சம் வட்டி கிடைக்கும்நீங்கள், அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் ரூ. 5 லட்சத்தை முதலீடு செய்தால், அதன் தொகை முதிர்வு அடையும் போது உங்களுக்கு மொத்தம் ரூ. 7,24,974 கிடைக்கும். இதில் நீங்கள் டெபாசிட் செய்த ரூ. 5,00,000 உடன் ரூ. 2,24,974 நிகர மற்றும் நிலையான வட்டியும் அடங்கும். அஞ்சல் அலுவலகத்தின் டைம் டெபாசிட் திட்டத்தில் உங்கள் பணம் முற்றிலும் பாதுகாப்பானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அஞ்சல் அலுவலகம், இந்திய அரசாங்கத்தின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. எனவே, நீங்கள் அஞ்சல் அலுவலகத்தில் டெபாசிட் செய்யும் ஒவ்வொரு ரூபாயும் முற்றிலும் பாதுகாப்பானது.