இலங்கை
அதிரடிப்படையின் வாகனம் அப்பாவிப் பொதுமகன் பலி

அதிரடிப்படையின் வாகனம் அப்பாவிப் பொதுமகன் பலி
ஓமந்தையில் துயரம்
வவுனியா ஓமந்தை பகுதியில் விசேட அதிரடிப்படையின் வாகனமும், மோட்டார்சைக்கிளும் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார்சைக்கிளில் பயணித்த பொதுமகன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்ணதாசன் திவியன் (வயது32) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
மோட்டார் சைக்கிளில் இருவர் பயணித்த நிலையில், மற்றைய நபர் காயங்களுடன் மீட்கப்பட்ட வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். விபத்துத் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.