இலங்கை
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ரோஸ்டன் சேஸ் நியமனம்

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக ரோஸ்டன் சேஸ் நியமனம்
மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் புதிய தலைவராக சகலதுறை வீரரான ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் அணித்தலைவர் பதவியிலிருந்து கிரேக் பிரத்வெய்ட் விலகிய நிலையில், தற்போது புதிய தலைவராக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
49 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஸ்டன் சேஸ் 5 சதங்கள் உட்பட இரண்டாயிரத்து 265 ஓட்டங்களையும், 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.