இலங்கை
வெள்ளிக்கிழமையில் மறந்தும் கூட இதை செய்துடாதிங்க

வெள்ளிக்கிழமையில் மறந்தும் கூட இதை செய்துடாதிங்க
வெள்ளிக்கிழமையன்று சில செயல்களை செய்யலாம், சில செயல்களை செய்யக் கூடாது என்று ஆன்மிக ரீதியாக சொல்லப்படுகிறது. வெள்ளிக்கிழமையில் செய்ய வேண்டிய விஷயங்களை முறையாக செய்தால் எப்படி மகாலட்சுமியின் மனம் மகிழ்ந்து, அவளின் அருள் கிடைக்குமோ, அதே போல் வெள்ளிக்கிழமையில் செய்யக் கூடாத விஷயங்களை செய்தால் மகாலட்சுமியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
அப்படி என்னென்ன செயல்களை வெள்ளிக்கிழமையில் செய்யக் கூடாது என்று பார்க்கலாம்.
செல்வத்திற்கு உரிய மகாலட்சுமியை 24 வெள்ளிக்கிழமைகள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் வீட்டில் செல்வ வளம் அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் உள்ள தாயாருக்கு அபிஷேகத்திற்கு தேவையான பசும்பாலை வழங்கி கொடுத்தால் பண வரவு அதிகரிக்கும்.
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் தனலாபம் கிடைக்கும்.
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிப்பதாலும் வீட்டில் செல்வம் சேரும்.
வெள்ளிக்கிழமைகளில் மாலை வேளையில் சுத்தமான சாம்பிராணி கொண்டு வீடு முழுக்க புகை போடுவதன் மூலம் வீட்டில் ஏதேனும் துர்சக்திகள் இருந்தால் விலகிவிடும்.
வெள்ளிக்கிழமையில் ஒட்டடை அடிக்கக் கூடாது. எனவே வியாழக்கிழமையே ஒட்டடை அடித்து வீட்டை சுத்தம் செய்வது நல்லது.
வெள்ளிக்கிழமையன்று பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம். ஆனால் ஆண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது.
வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டவோ, முகச்சவரம் செய்யவோ, நகம் வெட்டவோ கூடாது.
பூஜை செய்யத் தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக் கூடாது. முடிந்தவரை பூஜை அறைப் பொருட்களை முந்தைய தினமே சுத்தம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
வெள்ளிக்கிழமையில் உப்பு, தயிர், பருப்பு,ஊசி போன்ற மகாலட்சுமி வாசம் செய்யும் பொருட்களை கடனாக கொடுக்கவோ, வாங்கவோ கூடாது.
வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வீட்டை இருள் சூழ்ந்ததாக வைத்திருக்கக் கூடாது.