இலங்கை
இன்று தேய்பிறை சஷ்டி விரதம் ; குடும்ப நலனுக்காக முருகனை எப்படி வழிபடுவது?

இன்று தேய்பிறை சஷ்டி விரதம் ; குடும்ப நலனுக்காக முருகனை எப்படி வழிபடுவது?
இன்று தேய்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்ளப்படுகிறது. முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து பக்தர்கள் வழிபட்டு குடும்ப நலனை அதிகரிப்பார்கள்.
தேய்பிறை சஷ்டி விரதத்துடன், திருவோண விரதமும் கடைபிடிக்கப்படுகிறது. திருவோண நட்சத்திரம் மற்றும் உத்திராட நட்சத்திரத்துடன் கூடிவரும் இந்த நாளில் முருகனை குடும்ப நலனுக்காக எப்படி வழிபடுவது? என்னும் ஆன்மீகம் சார்ந்த தகவலை பார்க்கலாம்.
தேய்பிறை சஷ்டி விரதம் கடைபிடிப்பவர்கள் இந்த நாளில் காலையிலேயே எழுந்து நீராடி சுத்த பத்தமாக மஞ்சள் அல்லது வெள்ளை நிற உடைகளை உடுத்திக் கொண்டு பூஜை அறையில் முருகப்பெருமானை அலங்கரித்து தயார் செய்து வைத்து, விரதம் இருந்து வழிபட வேண்டும்.
முழு நேர விரதம் இருக்க முடியாதவர்கள் பால் மற்றும் பழங்களை மட்டும் எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம். தேய்பிறை சஷ்டி விரதம் கடைபிடிப்பதன் மூலம் குடும்பத்தில் சாந்தியும், அமைதியும் நிலவும்.
செல்வ செழிப்பு அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அது மட்டுமல்லாமல் நோய் நொடிகளையும் தீர்க்கக் கூடியது இவ்விரதம்! எதிரிகளின் தொல்லை நீங்கவும், மன நிம்மதி கிடைக்கவும், ஆண் பிள்ளைகளை வைத்திருப்பவர்களும் இந்த தேய்பிறை சஷ்டி விரதத்தை கடைபிடிக்கலாம்.
முருகனை அலங்காரம் செய்து அவருடைய வேல் வைத்திருந்தால், முறையே நல்ல தண்ணீர், பன்னீர், பால், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் போன்றவற்றால் அபிஷேகம் செய்யலாம்.
தேய்பிறை சஷ்டி விரதத்தில் அக்கார வடிசல் நைவேத்தியம் படைப்பது ரொம்பவும் விசேஷமானது.
பாசிப்பருப்பு, பால், நெய், வெல்லம் சேர்த்து செய்யப்பட்டுள்ள இந்த அக்காரவடிசல் முருகனுக்கு ரொம்பவும் பிடித்தமான உணவுப் பொருளாகும். குடும்ப நன்மை கருதி குடும்பப் பெண்கள், இந்த தேய்பிறை சஷ்டி விரதத்தை அதிகாலையிலேயே கடைபிடித்து முருகனை வழிபடலாம்.