Connect with us

இலங்கை

ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் காதலியை கொலை செய்த காதலன்

Published

on

Loading

ஜீன்ஸ் பேண்ட் அணிந்ததால் காதலியை கொலை செய்த காதலன்

இந்தியாவில் ஜீன்ஸ் பேண்ட் அணிவது பிடிக்காததால் காதலியை , காதலன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், காதலனுக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது.

இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, மும்பையை சேர்ந்தவர் வினோத் குமார் (34). இவர் சந்தியா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

Advertisement

இதில், ஜீன்ஸ், டி-சர்ட் ஆடை அணிவதும் மற்ற ஆண்களுடன் சந்தியா பேசுவது வினோத் குமாருக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

இதனால் அவர் சந்தியாவுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.

பின்னர், கடந்த 2019 ஒக்டோபரில் சாந்தா குரூசில் ஒரு ஹொட்டல் அறையில் வைத்து சந்தியாவின் கழுத்தை கயிற்றால் நெரித்து கொலை செய்து விட்டு வினோத் குமார் தப்பியுள்ளார்.

Advertisement

தப்பிச் சென்ற போது வினோத் குமார் காயமடைந்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

பின்னர் பொலிஸார் அவரை கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு மும்பை செசன்ஸ் கோர்ட்டில் இடம்பெற்று வந்த நிலையில் , சந்தியா ஜீன்ஸ், பேன்ட், டி-சர்ட் அணிவது ஆகிய விடயங்களுக்கு வினோத் குமார் வெறுப்புடன் இருந்ததற்கான சாட்சியங்கள் இருந்தன.

Advertisement

அதன் அடிப்படையில், வழக்கு விசாரணை முடிவில் வினோத்குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன