Connect with us

பொழுதுபோக்கு

OTT Release Update: ஆக்ஷன் முதல் ரொமான்ஸ் வரை: இந்த வாரம் ஒடிடியில் உங்க பேவரெட் எந்த ஜானர்?

Published

on

Loading

OTT Release Update: ஆக்ஷன் முதல் ரொமான்ஸ் வரை: இந்த வாரம் ஒடிடியில் உங்க பேவரெட் எந்த ஜானர்?

ஒவ்வொரு வாரமும் திரையரங்குகளில் வெளியாகும் படங்களை போல், ஒடிடி தளங்களில் வெளியாகும் படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதற்காக வாரந்தோறும், நெட்ஃபிலிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, சோனி லிவ் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் போன்ற முன்னணி ஓடிடி தளங்கள் பலவிதமான புதிய திரைப்படங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியாக உள்ள படங்கள் குறித்து பார்ப்போம்.போல் சுக் மாஃப் (Bhool Chuk Maaf):ராஜ்குமார் ராவ் மற்றும் வாமிக்கா கப்பி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படம் ஒரு அறிவியல் புனைகதை கலந்த காதல் நகைச்சுவை ஆகும். கரண் சர்மா இயக்கியுள்ள இந்த படத்தை தினேஷ் விஜன் தனது மெடாக் பிலிம்ஸ் மற்றும் அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார். முன்னதாக மே 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருந்த இப்படம், இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக தாமதமானது. வரும் மே 23-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இந்த படம்  ஓடிடியில் ஜூன் 6 வெளியாகிறது.ஹை ஜூனூன்! ட்ரீம். டேர். டாமினேட். (Hai Junoon! Dream. Dare. Dominate.):நீல் நிதின் முகேஷ் மற்றும் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த இந்திய இசை நாடகத் தொடரை அபிஷேக் சர்மா இயக்கியுள்ளார். இது ஜியோ ஹாட்ஸ்டாரில் மே 16-ந் தேதி வெளியாகியுள்ளது.டியர் ஹோங்ராங் (Dear Hongrang):கொரிய மொழியில் வெளியான இந்த வரலாற்று படத்தில், லீ ஜே-வூக் மற்றும் ஜோ போ-ஆ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். போ-ஆ நடித்த ஜே-யி, தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஹோங்-ராங்கைத் தேடுகிறார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஹோங்-ராங் (ஜே-வூக்) திரும்பும்போது, அவர் உண்மையில் யார் என்று ஜே-யி கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்தத் தொடர் மே 16 முதல் நெட்ஃபிலிக்ஸில் மே 16-ந்தேதி வெளியாகியுள்ளது.லவ், டெத் அண்ட் ரோபோட்ஸ் தொகுதி 4 (Love, Death and Robots Volume 4):இது பல்வேறு நடிகர்கள் மற்றும் குழுவினரால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களின் தொகுப்பாகும். இருப்பினும், சில அத்தியாயங்களில் சில குழு உறுப்பினர்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவர்களாக உள்ளனர். தொடரின் தலைப்பு ஒவ்வொரு அத்தியாயத்தின் கருப்பொருளான காதல், மரணம் மற்றும் ரோபோக்கள் ஆகியவற்றுடன் உள்ள தொடர்பைக் குறிக்கிறது. இந்த படம், நெட்ஃபிலிக்ஸ் மே 15-ந் தேதி வெளியாகியுள்ளது.ஓவர்காம்ப்பன்சேட்டிங் (Overcompensating):பெனிட்டோ ஸ்கின்னர் உருவாக்கியுள்ள இந்த நகைச்சுவைத் தொடரில் அவரே முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னாள் கால்பந்து வீரரான இவர் தனது பாலியல் அடையாளத்துடன் போராடுகிறார். மற்றவர்களுடன் பொருந்துவதற்காக ஒரு ஒதுக்கப்பட்டவருடன் நட்பை ஏற்படுத்திக் கொள்கிறார். அமேசான் பிரைம் வீடியோவில், மே 15-ந் தேதி வெளியாகியுள்ளது,அமெரிக்கன் மேன்ஹன்ட்: ஒசாமா பின்லேடன் (American Manhunt: Osama bin Laden):சிஐஏ உளவாளிகளுடனான அரிதான காட்சிகள் மற்றும் நேர்காணல்களுடன், இந்த ஆவணத்தொடர் ஒசாமா பின்லேடனைத் தேடிய நாடகீயப் பயணத்தை உங்களுக்குக் காட்டுகிறது. இந்த ஆவணப்படம், நெட்ஃபிலிக்ஸ் கடந்த மே 14-ந் தேதி வெளியாகியுள்ளது,மரணமாஸ் (Maranamass):புதுமுக இயக்குநர் சிவப்பிரசாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் பிரபல தொடர் கொலைகாரரான ரிப்பரின் கதையை நகைச்சுவையாக சொல்கிறது. பசில் ஜோசப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தை டொவினோ மற்றும் டிங்சன் தாமஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். இந்த படம் சோனி லிவ்வில், மே 15-ந் தேதி வெளியாகியுள்ளது.ஜாட் (JAAT)இந்தியில் பாபி தியோல் நடிப்பில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜாட் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், நெட்ஃபிளக்ஸ் ஒடிடி தளத்தில் வரும் ஜூன் 5-ந் தேதி வெளியாக உள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன