சினிமா
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..! x தளத்தில் தளபதி விஜய் வீரவணக்கம்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்..! x தளத்தில் தளபதி விஜய் வீரவணக்கம்..
தமிழ் ஈழம் அளிக்கப்பட்ட இறுதி நாளான மே 18 இன்று அனைத்து தமிழருக்கும் ஒரு கறுப்பு தினமாக இருக்கிறது. ஈழத்தில் தமிழர் வசிக்கும் இடங்களில் நினைவு தினம் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவரும் நடிகருமாகிய விஜய் தற்போது தமிழ் சொந்தங்களுக்கு வீரவணக்கம் செலுத்தியுள்ளார்.மேலும் இவர் தனது டுவிட்டர் பதிவில் ” உலகெங்கும் வசிக்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு, நம்பிக்கை ஊட்டும் நல்லுறவுகளாக நாம் இருப்போம் என்று முள்ளிவாய்க்கால் நினைவு தினமான இன்று உறுதி ஏற்போம். மண்ணில் விதைக்கப்பட்ட நம் உறவுகளுக்கும், உலகிற் சிறந்த உயர்தனி வீரத்திற்கும் நினைவஞ்சலியும் வீரவணக்கமும். மாமக்கள் போற்றுதும்! மாவீரம் போற்றுதும்! ” என பதிவிட்டுள்ளார்.மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பாக மாவட்டங்களில் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.