Connect with us

இந்தியா

இந்தியை திணித்து தேர்வு சதவீதத்தை குறைக்கும் புதுச்சேரி அரசு: காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குற்றச்சாட்டு

Published

on

அடுத்தடுத்து எம்எல்ஏக்கள் ராஜினாமா : புதுவையில் காங்கிரசுக்கு சிக்கல்

Loading

இந்தியை திணித்து தேர்வு சதவீதத்தை குறைக்கும் புதுச்சேரி அரசு: காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் கமிட்டியின் மேலிட பொறுப்பாளர் க்ரீஷ் சோடாங்கர் புதுவை வந்துள்ளார். அவர் இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, வைத்திலிங்கம் எம்.பி., சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து அவர்கள் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது வரும் சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது, வாக்குகளை எப்படி திரட்டுவது, 30 தொகுதிகளிலும் காங்கிரசை எப்படி நிலை நிறுத்துவது என ஆலோசனை நடத்தப்பட்டது.புதுவையில் சட்டம் ஒழுங்கு செயலிழந்து உள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து காங்கிரஸ் மட்டுமின்றி பா.ஜ.க., சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி சென்று முறை யிட்டுள்ளனர் . கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட உமாசங்கர் வழக்கில் கைது செய்துள்ள நபர்களுக்கு பின்னால் யார் உள்ளார்கள் என கண்டு பிடிக்க வேண்டும், இந்த கொலையின் பின்னணியில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.குற்றவாளிகளுக்கு துணையாக அரசு நிற்கிறது. பெஸ்ட் புதுச்சேரியாக மாற்றுவோம், ஊழல் நடக்காது என பிரதமர் தெரிவித்து இருந்தார். ஆனால் பெஸ்ட் புதுச்சேரி நடைமுறை படுத்தப்பட்டுள்ளதா? மதுவை தவிர புதுச்சேரியில் வேறு எதுவும் இல்லை. சி.பி.எஸ்.இ. மற்றும் இந்தியை திணித்து தேர்வு சதவீதத்தை அரசு குறைத்துள்ளது.ஊழலை தவிர்த்து என்.ஆர்.காங்., பா.ஜ.க. அரசு அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. கோவில், தேவாலயம் மற்றும் பள்ளி அருகே ரெஸ்டோ பார்களை திறந்து குடி தள்ளாட்டமாக உள்ளது. ஆன்மீகம் தழைக்க ஆட்சியர்கள் ஒன்றும் செய்யவில்லை. எனவே மக்கள் விரோத ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க. அரசு செய்துள்ள ஊழல்களை ஆதாரத்துடன் காங்கிரஸ் சேகரித்துள்ளது.2 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு உள்ளது. அமைச்சர் தேனி. ஜெயக்குமார் மீது சந்தன மரம் கடத்தல் வழக்கு உள்ளது. இந்த ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். இதனை குடியரசு தலைவரிடம் புகாராக அளிக்கப்படும்.பொய்களை கூறி ஆட்சியர்கள் 4 ஆண்டுகளை ஒட்டி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர். தி.மு.க வுடனான கூட்டணி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, தற்போது 30 தொகுதிகளிலும் காங்கிரசை பலப்படுத்துவது மட்டுமே நோக்கம் என மேலிட பொறுப்பாளர் பதிலளித்தார்.செய்தி: பாபு ராஜேந்திரன் – புதுச்சேரி

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன