இலங்கை
திடீரென- மயங்கி வீழந்து இளைஞர் சாவு!

திடீரென- மயங்கி வீழந்து இளைஞர் சாவு!
யாழ்ப்பாணம், வண்ணார்பண்ணையில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், அவரது உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.
வண்ணார்பண்ணையைச் சேர்ந்த பா.சிராஜ் (வயது-29) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார். இவரது குடும்பத்தினர் கடந்த 16ஆம் திகதி உறவினரின் திருமண நிகழ்வுக்காகச் சென்றிருந்த நிலையில், இவர் தனது சகோதரருடன் வீட்டில் இருந்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு இவர் தனது நண்பருடன் மது விருந்தில் ஈடுபட்டார் என்றும், இன்று அதிகாலை வீட்டுக்கு வெளியே வந்தபோது அவர் மயங்கி வீழ்ந்து உணர்வற்றிருந்தார் என்றும் கூறப்படுகின்றது.
அதையடுத்து அங்கிருந்தவர்கள் பொலிஸ் அவசர அழைப்புக்கு அறிவித்ததை அடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் அவரை அம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர். எனினும் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புக்கான காரணத்தைக் கண்டறிய உடலில் இருந்து பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்காகக் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன. இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.