Connect with us

சினிமா

ரவி மோகனால் ரூ. 100 கோடி கடன்.. அவரது மாமியார் வெளியிட்ட அறிக்கை

Published

on

Loading

ரவி மோகனால் ரூ. 100 கோடி கடன்.. அவரது மாமியார் வெளியிட்ட அறிக்கை

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வரும் நிலையில், பாடகி கெனிஷாவுடன் ரவி பழகி வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கோபத்துடன் ஆர்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தனர். இதன்பின் திரையுலக நட்சத்திரங்கள் பலரும், ஆர்த்திக்கு துணையாக நின்றனர்.இதை தொடர்ந்து ரவி மோகன் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், ” என் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர், என்னை தங்க முட்டையிடும் வாத்தாக பயன்படுத்தினர்” என கூறியிருந்தார். ரவி மோகனின் இந்த அறிக்கைக்கு பதிலடி தரும் வகையில், அவரது மாமியார் சுஜாதா விஜயகுமார் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த அறிக்கையில், “கடந்த 2007ம் ஆண்டு ‘வீராப்பு’ எனும் படத்தை தயாரித்தேன், அப்படம் வெற்றியை கொடுத்தது. அதன்பின், தொலைக்காட்சியில் மட்டுமே கவனம் செலுத்தினேன். 2017ல் ரவி மோகன், பட தயாரிக்க வேண்டும் என்றார்.அந்த ஆண்டு, ரவி மோகன் நடிக்க நான் தயாரித்த படம் ‘அடங்கமறு’. அப்படம் விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்றாலும், வணிக ரீதியாக வெற்றி பெறவில்லை. ரவி மோகன் வற்புறுத்தியதால் தொடர்ந்து படம் தயாரித்தேன். இதன்பின், அடங்கமறு, பூமி, சைரன் என மூன்று திரைப்படங்களை ரவி மோகனை வைத்து தயாரித்த. மூன்றும் தோல்வியடைந்தது. இதற்காக ரூ. 100 கோடி கடன் வாங்கினேன்.அதில், 25 சதவீதத்தை ரவி மோகனுக்கு சம்பளமாக வழங்கினேன். இதற்காக அனைத்து ஆதாரமும் உள்ளது. இப்போது ஏன் கடனுக்காக நான் அவரை பொறுப்பேற்க சொன்னதாக புகார் கூறுகிறார். அதில் உண்மை இல்லை. நான் அவரை நாயகன், மாப்பிள்ளையாக மட்டுமின்றி, என் மகனாகவே பார்த்தேன். பல கோடி ரூபாய் நஷ்டம் மற்றும் மன உளைச்சலை நான் மட்டுமே ஏற்றேன்.படம் தோல்வியடைந்ததும், ஆட்டுத்த படம் நடித்து தருவதாக மட்டுமே ரவி மோகன் கூறினார். ஆனால், கடனுக்கு பொறுப்பேற்கவில்லை. அவர் கூறியபடி, கடனுக்காக அவரை பொறுப்பெடுக்க வைத்ததற்கான ஆதாரத்தை அவர் காட்டட்டும். இன்று வரை அவரை நான் நாயகனாக மட்டுமே பார்க்கிறோம், ரசிக்கிறோம்.இது நீங்கள் எப்போதும் அலைக்கும், இந்த அம்மாவின் ஆசை. என் பேர குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக, என் மகளும், மாப்பிள்ளையும் இணைந்து வாழ வேண்டும். என் மீது மாமியார் சித்திரவதை என்கிற குற்றசாட்டை சுமத்தாதீர்” என அவர் கூறியுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன