இலங்கை
இன்றிரவு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும் தொகை உப்பு

இன்றிரவு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் பெரும் தொகை உப்பு
இறக்குமதி செய்யப்படும் உப்பு தொகை இன்றிரவு நாட்டை வந்தடையும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில், இவ்வாறு உப்பு இறக்குமதி செய்யப்படுவதாக அமைச்சர் கூறினார்.
நாடாளுமன்ற அமர்வின் போது அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி, இன்றிரவு (21) 3,050 மெட்ரிக் டன் உப்பைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, உப்பு விற்பனையில் சில தொழிலதிபர்கள் இலாபம் ஈட்டிக் கொள்ள அரசாங்கம் அனுமதித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் இன்று நாடாளுமன்றத்தில் அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.