Connect with us

இலங்கை

காங்கேசன் ரயில் நிலையத்தில் 764, 769 வழித்தடச் சேவைகள் உறுதிப்படுத்துமாறு ஆளுநர் உத்தரவு

Published

on

Loading

காங்கேசன் ரயில் நிலையத்தில் 764, 769 வழித்தடச் சேவைகள் உறுதிப்படுத்துமாறு ஆளுநர் உத்தரவு

764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிப்பதை உறுதிப்படுத்துமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆளுநர் அலுவலகம் அனுப்பிவைத்துள்ள செய்திக் குறிப்பில் உள்ளதாவது:
வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கடந்த 20ஆம் திகதியன்று தனியார் துறையின் போக்குவரத்தைச் சீரமைப்பது தொடர்பில் கலந்துரையாடல் நடைபெற்றது. இதன்போது, 764 மற்றும் 769 ஆகிய வழித்தடங்களின் பேருந்து சேவைகளை காங்கேசன்துறை ரயில் நிலையத்திலிருந்து ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்டது. எனவே, இந்தத் தீர்மானத்துக்கு அமைவாக பேருந்துகள் பயணிக்கின்றனவா என்பதை கண்காணிக்குமாறு பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உத்தரவிட்டுள்ளார் – என்றுள்ளது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன