இலங்கை
குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய லக்னோ

குஜராத்தை வீழ்த்தி வெற்றியை தனதாக்கிய லக்னோ
18ஆவது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் 64ஆவது லீக் போட்டியில் ப்ளே-ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள குஜராத் டைட்டன்ஸ், அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்ட லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
இப்போட்டியிற்கான நாணயசுழற்சியில் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தெரிவு செய்துள்ளது.
அதன் படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுகளை இழந்து 235 ஓட்டங்களை பெற்று குஜராத் அணிக்கு 236 ஓட்டங்களை வெற்றியிலக்காக நிர்ணயித்தது
வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுகளை இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது