Connect with us

டி.வி

சீதா லவ் பண்ணுறாளா..? ஷாக்கில் முத்து..! மனோஜிடம் மண்டாடி நிற்கும் ரோகிணி..!

Published

on

Loading

சீதா லவ் பண்ணுறாளா..? ஷாக்கில் முத்து..! மனோஜிடம் மண்டாடி நிற்கும் ரோகிணி..!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மீனா முத்துவைப் பாத்து நாளைக்கு கோயிலுக்குப் போய் சீதாவோட லவ்வரைப் பாக்க வேணும் என்று சொல்லுறார். அதுக்கு முத்து நம்ம சீதா லவ் எல்லாம் பண்ணுறாளோ என்று கேக்கிறார். மேலும் ஏன் அப்ப இவ்வளவு நாளா சொல்லாம இருந்தனீ என்று மீனாவப் பாத்துக் கத்துறார் முத்து. பின் மீனா இவள் லவ் பண்ணுறது இன்னும் அம்மாவுக்கே தெரியாது எனக்கு மட்டும் தான் சொன்னவள் நாம நாளைக்குப் போய் அவ லவ் பண்ணுறவரை பார்ப்போம் என்கிறார். இதனை அடுத்து விஜயா ரோகிணி வாங்கிக் கொடுத்த செயினை போட்டுப் பாத்து தனக்கு வடிவா இருக்கோ என்று கண்ணாடிக்கு முன்னாடி நின்று பாக்கிறார்.அதனை அடுத்து ரோகிணி மனோஜைப் பாத்து உங்கட அம்மா ஏன் இப்புடி இருக்காங்க என்று கேக்கிறார். மேலும் எந்த மருமகள் மாமியாருக்கு இப்படியான கிப்ட் எல்லாம் வாங்கிக் கொடுப்பாங்க என்று கேக்கிறார். அதுக்கு மனோஜ் எங்க அம்மா என்ன செய்தாலும் மன்னிப்பாங்க ஆனா பொய் சொன்னா மட்டும் மன்னிக்கவே மாட்டாங்க என்று சொல்லுறார். இதனைத் தொடர்ந்து மனோஜ், நான் என்ட அம்மா சொல்லுறதைத் தான் கேட்பேன் அவங்க தான் எனக்கு எல்லாமே என்று சொல்லுறார். அதைக் கேட்ட ரோகிணி அப்ப எதுக்கு கல்யாணம் பண்ண என்று கேக்கிறார். மேலும் இப்ப இந்த வீட்டில இருக்கிற எல்லாருமே காமெடியாத் தான் என்னைப் பாக்குறாங்க என்று சொல்லுறார். பின் ரோகிணி மனோஜை தனக்கு சப்போர்ட் பண்ணிக் கதைக்கச் சொல்லுறார். அதைக் கேட்ட மனோஜ் கொஞ்ச நாள் போகட்டும் அதுக்குப் பிறகு நானே போய் அம்மாட்ட கதைக்கிறேன் என்கிறார். இதனை அடுத்து ஸ்ருதி நாம ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு ரெஸ்டாரெண்ட் ஆரம்பிப்போம் என்று சொல்லுறார். அதுக்கு ரவி நானே சம்பாதிச்சு ஒரு ரெஸ்டாரெண்டை ஆரம்பிக்கிறேன் என்கிறார்.அதனை அடுத்து சீதாவும் அருணும் கோயிலுக்குப் போய் நிற்கிறார்கள். அவங்களப் பார்க்க late ஆகிட்டு என்று முத்து மீனாவுக்குப் பேசிக் கொண்டிருக்கிறார். அதனை அடுத்து, போகும் போது பழங்கள் வாங்கிக் கொண்டு போவோம் என்று சொல்லுறார் முத்து. பின் அருண் சீதாவைப் பாத்து ஹனிமூனுக்கு எங்க போவம் என்று கேக்கிறார். இதைக் கேட்ட சீதா கோயிலில வச்சுக் கதைக்கிற கதையா இது என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன