சினிமா
சூரியின் சிநேகத்தால் சினிமாவில் பிஸியாகும் சின்னத்திரை நடிகை..! யார் தெரியுமா..?

சூரியின் சிநேகத்தால் சினிமாவில் பிஸியாகும் சின்னத்திரை நடிகை..! யார் தெரியுமா..?
சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு அசத்தலான பாய்ச்சலுடன் முன்னேறியுள்ளார் நடிகை ரோஷினி ஹரிப்பிரியா. தொடர்ச்சியாக வளர்ச்சி பெறும் இவரது பயணத்தில், ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முதல் கருடன் வரை, நிறைய திருப்புமுனைகள் இருந்தாலும் ஒரே இடத்தில் உறைந்துவிடாமல் உயர்ந்து கொண்டே செல்கிறார் என்பது தான் தனிச்சிறப்பு.தற்போது, நடிகர் சூரியுடன் அவர் கொண்டுள்ள நட்பும், அதனுடன் வந்துள்ள புதிய சினிமா வாய்ப்புக்களும் அவரை மீடியா மற்றும் ரசிகர்களிடம் பிரபல முகமாக மாற்றியுள்ளது. விஜய் டீவியில் ஒளிபரப்பான ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் மூலம் நடிகை ரோஷினி தமிழ் ரசிகர்களின் மனதில் முதல்முறையாக பதிந்தார். அற்புதமான குடும்ப பாங்கான முகம், நிதானமான நடிப்பு மற்றும் மென்மையான குரல் என்பன மூலம் ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பைப் பெற்றார். அதனை அடுத்து பல விளம்பரங்களில் மாடலாக நடித்திருந்தாலும், சீரியல் தான் அவரை மக்கள் மனதில் ஆழமாக பதியச் செய்தது. நடிப்பிலிருந்து நேரடியாக ‘குக்கு வித் கோமாளி’ என்ற ரியாலிட்டி ஷோவில் களமிறங்கிய ரோஷினியின் மற்றொரு முகத்தைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து கொண்டனர். சீரியலிலும் ரியாலிட்டி ஷோவிலும் வெற்றி பெற்ற பிறகு, ரோஷினி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்த படம் தான் ‘கருடன்’. இந்தப் படத்தில், விறுவிறுப்பான வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்த மலையாள நடிகர் உன்னி முகுந்தனின் மனைவியாக ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார். இதுவே அவரது முதல் சினிமா அனுபவமாக இருந்தாலும், தனது அழகு, நடிப்பு மற்றும் எளிமை ஆகியவற்றின் மூலமாக பல ரசிகர்களைக் கவர்ந்தார். ‘கருடன்’ படத்திற்கு பிறகு, ஒரே மாதத்தில் இரு புதிய திரைப்படங்களுக்கு ரோஷினி கையெழுத்திட்டுள்ளதாகவும், மேலும் சில விருப்பமான கதாபாத்திரங்கள் பற்றி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை எல்லாம் விட சிறப்பு என்னவென்றால், அவருக்கு இந்த வாய்ப்புகள் கிடைக்க ஒருவரின் பின்னணி ஆதரவு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.‘கருடன்’ படத்தில் தான் நடிகர் சூரி மற்றும் ரோஷினி நெருக்கமாக பழக ஆரம்பித்ததாக சொல்லப்படுகின்றது. படத்தின் படப்பிடிப்பு நேரங்களில் இருவரும் சிறப்பாக பழகியதனைத் தொடர்ந்து நல்ல நட்பு உருவாகியது. இதன் விளைவாக தற்பொழுது ரோஷினியின் அடுத்த படங்களுக்கு நடிகர் சூரி சிபாரிசு செய்வதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.