இலங்கை
யாழ்.மாநகரசபையினால் அகற்றபட்ட அசைவ உணவகத்தின் பெயர்ப்பலகை!

யாழ்.மாநகரசபையினால் அகற்றபட்ட அசைவ உணவகத்தின் பெயர்ப்பலகை!
யாழ்ப்பாணத்தில், நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையின் அனுமதியின்றி திறக்கப்பட்டுள்ள அசைவ உணவகத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் அகற்றப்பட்டுள்ளது.
நல்லூர் ஆலய சூழலில் மாநகர சபையிடம் அனுமதி பெறாது, அசைவ உணவகம் திறக்கப்பட்டுள்ள நிலையில், உணவகத்திற்கான அனுமதிகளை பெறுமாறு மாநகர சபை உணவகத்திற்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், அனுமதி இன்றி உணவகத்திற்கு முன்பாக வீதியோரமாக வைக்கப்பட்டிருந்த நிறுவனத்தின் பெயர் பலகை மாநகர சபையினரால் இன்று வியாழக்கிழமை(22) அகற்றப்பட்டது.
இதேவேளை, குறித்த உணவகத்தில் சில சுகாதார குறைபாடுகள் காணப்பட்டமை தொடர்பில் மாநகரசபை பொது சுகாதார பரிசோதகரினால், யாழ். நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
மேலும், நல்லூர் ஆலய சூழலில் புனித தன்மையை பேணும் வகையில் குறித்த உணவகத்தினை அகற்ற கோரி கடந்த செவ்வாய்க்கிழமை கண்டன போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், நேற்றையதினம் மனு ஒன்றும் யாழ். மாநகரசபை ஆணையாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.