உலகம்
அமெரிக்காவில் சோகம்!

அமெரிக்காவில் சோகம்!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டியாகோ பகுதியில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
தனியாருக்குச் சொந்தமான அந்த சிறிய ரக விமானத்தில் 10 பேர் வரை பயணித்தாக சொல்லப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் இந்த விமானம் திடீரென விழுந்துள்ளது. பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானதுடன் பவர் லைன் காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணை நடந்து வருகிறது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.[ஒ]