Connect with us

இலங்கை

கனவில் வந்த ரகசிய கனவு ; இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

Published

on

Loading

கனவில் வந்த ரகசிய கனவு ; இத்தாலியிலிருந்து இலங்கைக்கு வந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி

இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வந்த பெண் ஒருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

சிலாபம் – மாதம்பை பகுதியில் கடந்த 19ஆம் திகதி பொலிஸாரால் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின்போது பெண் ஒருவர் உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். 

Advertisement

மரணித்த தந்தை கனவில் வந்து புதையல் தொடர்பில் தகவல் அளித்ததால் அவர்கள் இவ்வாறு புதையல் தோண்ட முயற்சித்ததாக பொலிஸாரிடம் கூறியுள்ளனர்.

புதையல் தோண்ட முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

Advertisement

இந்த நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, கைது செய்யப்பட்ட பெண் இத்தாலியில் தொழில் செய்பவர் என்றும், புதையல் தோண்டுவதற்காக இத்தாலியில் இருந்து இலங்கைக்கு வருகைத் தந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

மரணித்த தந்தை கனவில் வந்து புதையல் இருப்பது தொடர்பில் தெரிவித்ததாகவும், இதன் காரணமாக தந்தை கூறிய புதையலை கண்டெடுப்பதற்காக தான் நாட்டிற்கு திரும்பியதாகவும் அந்தப் பெண் கூறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் ஜூன் மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன