இலங்கை
சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிர் மாய்ப்பு!

சிகிச்சை பெற்று வந்த நோயாளி உயிர் மாய்ப்பு!
பொலன்னறுவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவர் கூர்மையான ஆயுதத்தால் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 18ஆம் திகதி மாத்தளையில் இருந்து வந்த 55 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான இவர், மூச்சுத்திணறல் மற்றும் சிறுநீரக நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் நேற்று மாலை, தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் தனது மார்பு பகுதியில் காயப்படுத்தி அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.