இந்தியா
இந்திய கடற்பகுதியிலன் விபத்துக்குள்ளான சரக்கு கப்பல் – மூவர் மாயம்!

இந்திய கடற்பகுதியிலன் விபத்துக்குள்ளான சரக்கு கப்பல் – மூவர் மாயம்!
இந்திய விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியக் கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் ஒன்று கவிழ்ந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விபத்து நடந்த நேரத்தில் கப்பலில் 24 பணியாளர்கள் இருந்ததாகவும், அவர்களில் 21 பேர் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து ஏற்பட்டபோது, கப்பல் இந்தியாவின் விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து இந்தியாவின் கொச்சி துறைமுகத்திற்குச் சென்று கொண்டிருந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் கடல் சீற்றம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாகவும், இந்திய நேரப்படி இரவு 10 மணிக்கு கப்பல் கொச்சி துறைமுகத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்ததாகவும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
லங்கா4 (Lanka4)