Connect with us

சினிமா

விஜய் ஆண்டனியின் 26வது படம் ‘லாயர்’.! இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்.! வைரலாகும் வீடியோ

Published

on

Loading

விஜய் ஆண்டனியின் 26வது படம் ‘லாயர்’.! இன்று முதல் படப்பிடிப்பு தொடக்கம்.! வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்தவர் விஜய் ஆண்டனி. தனது வித்தியாசமான நடிப்பு மற்றும் இசை அமைப்புகளால் திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றவர். ஆனால் இசையமைப்பாளராக மட்டுமின்றி, நடிகராகவும் தன்னை வெற்றிகரமாக மாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் ஆண்டனிக்கு பிரபலத்தை ஏற்படுத்திய படம் ‘பிச்சைக்காரன்’. இப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், வசூலிலும் சாதனை படைத்தது. இதைத் தொடர்ந்து, ‘சலீம்’, ‘இந்தியா பாகிஸ்தான்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளில் விஜய் ஆண்டனி முழுநேர நடிகராக மாறியுள்ளார்.விஜய் ஆண்டனியின் கைவசத்தில் தற்போது ‘ககன மார்கன்’, ‘வள்ளி மயில்’, ‘அக்னி சிறகுகள்’, ‘சக்தி திருமகன்’ உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவை அனைத்தும் தயாரிப்பு பணியில் உள்ள படங்கள். இந்த நிலையில், தற்போது அவர் தனது 26வது படத்தில் நடித்து வருகின்றார்.இந்த 26வது திரைப்படத்திற்கு ‘லாயர்’ (Lawyer) என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை ‘ஜென்டில்வுமன்’ படத்தின் இயக்குநர் ஜோஷுவா சேதுராமன் இயக்குகிறார். ஜென்டில்வுமன் படத்தின் மூலம் விமர்சன ரீதியாகவும், கதைக்களத்தில் வித்தியாசத்தையும் காட்டியவர் ஜோஷுவா. தற்போது அவர் இயக்கும் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.‘லாயர்’ படத்தின் தயாரிப்பை விஜய் ஆண்டனியே மேற்கொண்டு வருகிறார். இது அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான Vijay Antony Film Corporation வாயிலாக உருவாகி வருகின்றது. ‘லாயர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரபூர்வமாக தொடங்கியது. படத்தின் முதல் காட்சியின் (First Shot) வீடியோவையும் படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன