சினிமா
விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமையா!! வசூலில் படுதோல்வியடைந்த ஏஸ் திரைப்படம்

விஜய் சேதுபதிக்கு இந்த நிலைமையா!! வசூலில் படுதோல்வியடைந்த ஏஸ் திரைப்படம்
கடந்த வாரம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஏஸ். இப்படத்தை இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி, தயாரித்து இருந்தார். இப்படத்தின் மூலம் கன்னட நடிகை ருக்மிணி வசந்த் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.மேலும் வில்லன்களாக அவினாஷ் மற்றும் பப்லூ நடித்திருந்தனர். யோகி பாபு, திவ்யா பிள்ளை முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த வாரம் திரைக்கு வந்த ஏஸ் திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் முதல் நாளில் இருந்தே வசூலில் பின்னடைவை சந்தித்து வந்தது.இந்த நிலையில், இதுவரை ரூ. 6.9 கோடி வசூல் செய்துள்ளது. இதன்மூலம் பாக்ஸ் ஆபிஸில் விஜய் சேதுபதியின் ஏஸ் திரைப்படம் படுதோல்வியை சந்தித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.