இலங்கை
இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்

இலங்கையில் இன்று டொலர் பெறுமதியில் மாற்றம்
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்று (16) சற்று குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகப்பூர் நாணய மாற்று விபரங்களுக்கு அமைவாக,
அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று 295.75 ரூபாவாகவும், 304.05 ரூபாவாகவும் உள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை (13) அமெரிக்க டொலர் ஒன்றுக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது 294.99 ரூபாவாகவும், 303.29 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
அதேவேளை வளைகுடா நாணயங்கள் உட்பட வெளிநாட்டு நாணயங்களுக்கு நிகராகவும் இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று குறைந்துள்ளது.