Connect with us

இலங்கை

விலைமனுக்கோரல் முறையில் பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்கள் விற்பனை

Published

on

Loading

விலைமனுக்கோரல் முறையில் பெருந்தோட்ட அமைச்சின் வாகனங்கள் விற்பனை

பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சுக்கு சொந்தமான பயன்படுத்தப்பட்ட வாகனங்களை விற்பனை செய்வதற்கான கேள்வி மனுக்கோரல் கோரப்பட்டுள்ளன.

இந்த வாகனங்களில் 16 சொகுசு வாகனங்கள் 03 பழைய வாகனங்கள் மற்றும் 03 ஏனைய வாகனங்களும் உள்ளடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.

Advertisement

இலங்கை பிரஜைகள் அல்லது இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் மாத்திரம் இந்த மனுக்கோரலில் பங்கேற்க தகுதியுடையவர்கள் ஆவர்.

இலங்கைப் பிரஜைகள் தங்கள் தேசிய அடையாள அட்டையின் சான்றளிக்கப்பட்ட நகலையும், நிறுவனங்கள் அல்லது அமைப்புகள் பதிவுச் சான்றிதழின் சான்றளிக்கப்பட்ட நகலையும் மனுக்கோரலுக்கு விண்ணப்பிக்கும் போது இணைக்க வேண்டும்.

ஆர்வமுள்ள நபர்கள் மேலதிக தகவலுக்கு சிரேஷ்ட உதவிச் செயலாளர் அல்லது போக்குவரத்து அலுவலரை 0112186076 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

மேலும், 2025 ஜூன் 16 முதல் ஜூலை 07 வரை அலுவலக நாட்களில் காலை 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை வாகனங்களை ஆய்வு செய்யலாம் என்றும் பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன