Connect with us

இலங்கை

நயினை நாக பூஷணி அம்மன் மகோற்சவம் தொடர்பில் கலந்துரையாடல்

Published

on

Loading

நயினை நாக பூஷணி அம்மன் மகோற்சவம் தொடர்பில் கலந்துரையாடல்

வரலாற்று  பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஜூன் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஜூன் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

Advertisement

தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் (17) காலை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர்,

நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் வியாழக்கிழமை (26) தொடங்கி  ஜூலை  மாதம் வெள்ளிக்கிழமை (11) ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

Advertisement

அனைத்து பக்தர்களும் சிறப்பான முறையில் எந்தவித இடையூறும் இல்லாமல் ஸ்ரீ நாக பூசணி அம்பாளை தரிசிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கலந்துரையாடல் ஒழுங்குபடுத்தப்பட்டடுள்ளது.

மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்கவும் என்றார்.

மேலும் இக் லந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க. ஸ்ரீமோகனன், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ. தர்சினி, நாகபூஷணி அம்மன் ஆலயம் அறங்காவலர் சபைத் தலைவர் பரமலிங்கம், வேலணை பிரதேச செயலாளர் சிவகரன்,

Advertisement

சுகாதார வைத்திய அதிகாரிகள், இலங்கை போக்குவரத்து சபை அதிகாரிகள், கடற்படை அதிகாரி, பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச சபை செயலாளர், வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள்,

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள், மதுவரித் திணைக்கள அதிகாரிகள், துறைசார் திணைக்கள தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன