Connect with us

இலங்கை

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

Published

on

Loading

ஆசிய அபிவிருத்தி வங்கி புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆதரவு

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்து மேற்கொண்ட புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் பிரதிநிதிகள் தங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துள்ளார்கள்.

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனைத் தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரதமருக்கும், இலங்கைக்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோ மற்றும் அதன் ஏனைய பிரதிநிதிகளுக்கு இடையே நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டதாகப் பிரதமரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த கலந்துரையாடலின்போது, புதிய கல்வி சீர்திருத்தங்களுக்காக ஏற்கனவே எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் பாடசாலை கல்வியில் எதிர்வரும் ஆண்டிற்கான புதிய மறுசீரமைப்பை செயல்படுத்துவது,

சம்பந்தப்பட்ட சவால்கள் உள்ளிட்டவற்றை பிரதமர், ஆசிய அபிவிருத்தி வங்கி பிரதிநிதிகளுக்கு விளக்கியுள்ளார்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன