Connect with us

உலகம்

உலகளவில் பேசப்படும் ஈரானை தாக்கிய அமெரிக்காவின் B-2 விமானம்

Published

on

Loading

உலகளவில் பேசப்படும் ஈரானை தாக்கிய அமெரிக்காவின் B-2 விமானம்

அமெரிக்காவின் மிக நவீன மற்றும் மிக ரகசியமான போர் விமானங்களில் ஒன்றான B-2 ஸ்பிரிட் ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானம் நார்த்ரப் கிரம்மன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. 

இந்த விமானம் 1989 ஜூலை 17ல் முதல் முறையாக பறந்தது. குளிர் போர் காலத்தில் சோவியத் யூனியனின் ரேடார் பாதுகாப்பு அமைப்புகளை தாண்டி செல்லும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்ட இந்த விமானம், அதன் முக்கோண வடிவமும் சிறப்பு பூச்சுகளும் காரணமாக ரேடாரில் கண்டுபிடிக்க முடியாத தன்மையைக் கொண்டுள்ளது.

Advertisement

B-2 ஸ்பிரிட் விமானத்தின் தொழில்நுட்ப விவரங்கள் அசாதாரணமானவை. இது 40,000 அடி உயரத்தில் மணிக்கு 1,010 கிலோமீட்டர் வேகத்தில் பறக்க முடியும். விமானத்தின் நீளம் 21 மீட்டர், அகலம் 52 மீட்டர், உயரம் 5.18 மீட்டர் ஆகும். 

images/content-image/1750612641.jpg

இதன் எடை 1,52,000 கிலோகிராம் வரை இருக்கும். மிக முக்கியமாக, இந்த விமானம் 18,000 கிலோகிராம் வரை குண்டுகளை சுமக்கும் திறன் கொண்டது. இது மறு எரிபொருள் நிரப்பாமல் 11,100 கிலோமீட்டர் தூரம் பறக்க முடியும்.

B-2 விமானத்தின் சிறப்பம்சம் அது சுமக்கும் அழிவுகரமான ஆயுதங்கள். ஈரானின் அணு தளங்களை அழிக்க பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் GBU-57 Massive Ordnance Penetrator (MOP) எனப்படும் மிகப்பெரிய பங்கர் பஸ்டர் குண்டுகளை இதனால் சுமக்க முடியும். 

Advertisement

இந்த குண்டுகள் 30,000 பவுண்ட் (13,600 கிலோகிராம்) எடையுள்ளவை மற்றும் 200 அடி ஆழம் வரை நிலத்தின் அடியில் உள்ள பங்கர்களை அழிக்கும் திறன் கொண்டவை (ஒவ்வொரு குண்டும் 2 மில்லியன் டொலர்கள்). 

images/content-image/1750612655.jpg

மேலும் B83 அணுகுண்டுகள், JDAM குண்டுகள், மற்றும் பல்வேறு வகையான துல்லியமான தாக்குதல் ஆயுதங்களையும் இதனால் சுமக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
B-2 விமானத்தின் இயக்க செலவு மிக அதிகம். ஒரு மணி நேர பறப்பிற்கு சுமார் $1,35,000 செலவாகிறது. 

இதில் எரிபொருள், பராமரிப்பு, மற்றும் பணியாளர் செலவுகள் அடங்கும். ஒரு தாக்குதலுக்கு சராசரியாக $2.2 மில்லியன் டொலர்கள் செலவாகும்.
B-2 விமானங்கள் பல முக்கிய போர்களில் இதற்கு முன்னரும் பயன்படுத்தப்பட்டுள்ளன. கொசோவோ போரில் 1999ல் முதல் முறையாக போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டது. 

Advertisement

ஆப்கானிஸ்தான் போரில் 2001-ல், ஈராக் போரில் 2003ல், லிபியா தாக்குதலில் 2011-ல், மற்றும் சிரியாவில் ISIS-க்கு எதிரான தாக்குதல்களில் 2017ல் சொற்ப அளவிலும் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன.

images/content-image/1750612687.jpg

B-2 விமானம் ஒன்று இரண்டு பங்கர் பஸ்டர் குண்டுகளையே சுமந்து செல்ல முடியும், ஆறு குண்டுகள் ஈரான் மீது வீசப்பட்டதாக தெரிவிக்கப்படுவதால், இந்த தாக்குதலுக்கு 3 B-2 விமானங்கள் அமெரிக்காவினால் பயன்படுத்தப்பட்டுள்ளப்பட்டுள்ளதாக கருதலாம்.
மொத்தம் 21, B-2 விமானங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டதாக தகவல். 

ஆரம்பத்தில் 132 விமானங்கள் தயாரிக்க திட்டமிடப்பட்டிருந்தபோதிலும், அதிக செலவு காரணமாக உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

images/content-image/1750612631.jpg

ஒவ்வொரு விமானத்தின் விலை $2.1 பில்லியன் டொலர்கள் என்பது இதை உலகின் மிக விலையுயர்ந்த போர் விமானமாக ஆக்குகிறது.

 அமெரிக்காவின் பலமாக பார்க்கப்படும் இந்த போர் விமானம், மற்ற நாடுகளுக்கு அச்சுறுத்தலாகவும் பார்க்கப்படுகிறது, ரஷ்யாவிடம் T-60 விமானம் உள்ளது, இருப்பினும் அமெரிக்காவின் B-2 விமானமானது பலம்பொருந்தியதாக கருதப்படுகிறது. 

மேலும் சீனா H-20 என்கிற பலம்பொருந்திய ஸ்டீல் பம்பர் விமானத்தை தயாரித்து வருகிறது, இதன் கட்டமைப்பு 2030 அளவிலே முடிவடையலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எனவே, உலகின் பலம்பொருந்திய போர் விமானமாக B-2 தற்போதுவரை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

லங்கா4 (Lanka4)

அனுசரணை

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன