Connect with us

சினிமா

51வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய்! போட்டி போட்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரபலங்கள்

Published

on

Loading

51வது பிறந்தநாளைக் கொண்டாடும் விஜய்! போட்டி போட்டு வாழ்த்துகளைத் தெரிவிக்கும் பிரபலங்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் தனது 51வது பிறந்த நாளை ஜூன் 22, 2025 அன்று கொண்டாடுகிறார். இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் “ஜனநாயகன்” படத்தின் ‘பர்ஸ்ட் ரோர்’ வீடியோ வெளியானதும், ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா, அரசியல், சமூக துறைகளைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.அந்தவகையில் சீமான், விஜய்க்கு நேரடியாக அரசியல் நோக்கத்திலான வாழ்த்தை தெரிவித்துள்ளார். அவர் அதன்போது, “த.வெ.க கட்சித் தலைவர் விஜய்க்கு, நான் முதலாவதாக அரசியல் கட்சித் தலைவராக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.இதன் மூலம் விஜயின் அரசியல் வளர்ச்சி அரசியல் தலைவர்கள் மத்தியில் எவ்வாறு கவனிக்கப்படுகிறது என்பதை உணர முடிகிறது. மேலும் நடிகை நயன்தாரா, தனது டுவிட்டரில் “அன்புள்ள விஜய்க்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வரவிருக்கும் ஆண்டு சிறப்பாக அமையட்டும். ஜனநாயகனுக்கும் வாழ்த்துகள்.” என நெகிழ்ச்சியான வாழ்த்துகளை பகிர்ந்துள்ளார். இவ்வாறாக விஜயின் பிறந்தநாளுக்கு அனைத்து திரைபிரபலங்களும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன