Connect with us

பொழுதுபோக்கு

சித்தி சீரியல் நீனா ஞாபகம் இருக்கா? நாயகன் கமல்ஹாசனின் மகள்; இப்போ என்ன செய்கிறார்?

Published

on

Actress Neena

Loading

சித்தி சீரியல் நீனா ஞாபகம் இருக்கா? நாயகன் கமல்ஹாசனின் மகள்; இப்போ என்ன செய்கிறார்?

தமிழ் சினிமாவில் எத்தனையோ பேர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் பல முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் நடித்துள்ளனர். அதன்படி, நடிகை நீனாவை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா?அந்த வகையில், ‘நாயகன்’, ‘கேளடி கண்மணி’ போன்ற படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீனா. இதைத் தொடர்ந்த, 1994-ஆம் ஆண்டு வெளியான ‘விடுகதை’ திரைப்படத்தின் மூலமாக நடிகை நீனா, மக்கள் இடையே கவனம் பெற்றார். இது தவிர, அஜித் நடிப்பில் வெளியான ‘ராசி’ மற்றும் விஜய் நடிப்பில் வெளியான ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ போன்ற படங்களிலும் முக்கிய வேடத்தில் நீனா நடித்தார்.இவை அனைத்திற்கும் மேலாக ‘கண்ணாத்தாள்’ திரைப்படம் இவருக்கு பெரும் பெயரை பெற்றுத் தந்தது. இதில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் அதிகப்படியான ரசிகர்களிடம், நீனாவை கொண்டு சேர்த்தது. குறிப்பாக, பெண்கள் விரும்பும் ஒரு கதாபாத்திரமாக ‘கண்ணாத்தாள்’ திரைப்படத்தில் நீனா நடித்திருந்தார்.எனினும், சினிமாவில் தொடர்ச்சியான வாய்ப்புகள் வராததால் தொலைக்காட்சி சீரியல்கள் பக்கம் தனது கவனத்தை நீனா திசை திருப்பினார். இதில், ‘சித்தி’ ‘அண்ணாமலை’ போன்ற தொடர்கள் ரசிகர்களிடம் ஹிட்டானது. சினிமாவை தாண்டி மேலும் பலருக்கு நீனாவை அறியும் வகையில் இந்த சீரியல்கள் இருந்தன.அதன் பின்னர், சினிமா மற்றும் சின்னத்திரை ஆகியவற்றில் இருந்து படிப்படியாக நடிகை நீனா விலகத் தொடங்கினார். அந்த வகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நீனா, அதற்கடுத்து ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகி விட்டார். இந்நிலையில், நடிகை நீனா தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் சமூக ஊடகத்தில் உலா வருகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன