Connect with us

சினிமா

உணர்ச்சி நிறைந்த பயணத்துக்கு என் வாழ்த்துகள்! 3BHK படக்குழுவுக்கு சூரியின் எக்ஸ் தள பதிவு!

Published

on

Loading

உணர்ச்சி நிறைந்த பயணத்துக்கு என் வாழ்த்துகள்! 3BHK படக்குழுவுக்கு சூரியின் எக்ஸ் தள பதிவு!

தமிழ் திரையுலகில் தனிச்சிறப்பு வாய்ந்த இடத்தைப் பிடித்த நடிகர் சூரி, தனது நேர்மையான நடிப்புக்கும் நகைச்சுவை நடிப்பின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர். இவர் தற்போது பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வருகின்றார்.மேலும் இவர் தனது எக்ஸ் தள  பக்கத்தில் பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார் அப் பதிவு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது. ” 3BHK”திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இந்த படத்தில் சரத்குமார் மற்றும் தேவயாணி  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளனர். ஜூலை 4ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சித்தார்த், யோகி பாபு,மீதா ரகுநாத்  என பலர் நடித்துள்ளனர் . மேலும் இந்த படத்திற்கு அம்ரித் ராம்நாத் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் நடிகர் சூரி “3BHK ” படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்ட பதிவு வைரலாகி வருகின்றது.பதிவில் சூரி ” ஒரு கனவு தனக்கு ஒரு வீடு, சந்தோஷமும் சிரிப்பும் கலந்த இனிய இடம் தான் வீடு” இந்த “3BHK” திரைப்படத்தினை உருவாக்கத்திற்கு துணையாக இருந்த படக்குழுவுக்கு “உணர்ச்சி நிறைந்த ” என்னுடைய  மனமார்ந்த வாழ்த்துகளும். மேலும்  ஜூலை 4 அன்று, நம் இதயங்களை ஆழமாக தொடப்போகும் இந்த நல்ல கதை,வெற்றியின் வானில் பிரகாசமாக ஒளிரட்டும்! உங்கள் கனவு நிஜமாகி, உயர்ந்த வெற்றியை தொடட்டும் எனத் தனது எக்ஸ் தளத்தில்  பதிவிட்டுள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.  

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன