Connect with us

பொழுதுபோக்கு

இந்த தீபாவளி நம்மதான்; தேதி குறித்த லெஜண்ட் சரவணா: படத்தில் டைட்டில் எப்படி இருக்கும்?

Published

on

Legend saravana 2nd Movie

Loading

இந்த தீபாவளி நம்மதான்; தேதி குறித்த லெஜண்ட் சரவணா: படத்தில் டைட்டில் எப்படி இருக்கும்?

தி லெஜண்ட் படத்தின் மூலம் நடிகர் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமான லெஜணட் சரவணா தற்போது தனது அடுத்த படத்தில் நடித்து வரும நிலையில், இந்த படத்தை தீபாவளி தினத்தில் வெளியிட முயற்சி செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் தனது சரவணா ஸ்டோர் நிறுவனத்தின் விளம்பரத்தில் நடித்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் அருள் சரவணன். இவர் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோ மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமானார். ஜே.டி மற்றும் ஜெர்ரி இயக்கிய ஊர்வசி ருத்வாலா நாயகியாக நடித்த இந்த படத்தில், விஜயகுமார், பிரபு, லிவிங்ஸ்டன், நாசர், தம்பி ராமையா, மயில்சாமி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்தார்.பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் பான் இந்தியா படமாக வெளியான தி லெஜண்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், தமிழ் ரசிகர்கள் ட்ரோல் செய்ய தொடங்கினர். அதே சமயம், லெஜண்ட் சரவணன் தனது அடுத்த படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். கருடன் படத்தின் மூலம் மீண்டும் நட்சத்திர இயக்குனராக மாறிய இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் தயராகி வரும் புதிய படத்தில் லெஜண்ட் சரவணா நாயகனாக நடித்து வருகிறார்.தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. தனது தி லெஜண்ட் சரவணா நிறுவனத்தின் மூலம் அருள் சவரணன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்து தீபாவளி தினத்தில் இந்த படத்தை வெளியிட தயாராகி வருவதாக லெஜண்ட் சரவணா கூறியுள்ளார். இது குறித்து அவர் அளித்த பேட்டியில்,  இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு தீபாவளி தினத்தில் வெளியிட, படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக இந்த படம் அமைய வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். சஸ்பென்ஸ், த்ரில்லர், ஆக்ஷன், மாஸ், எமோஷன் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருக்கும். முதல் படத்தை விட இந்த படம் முற்றிலும் வித்தியமாக இருக்கும். இன்றைய ரசிகர்களுக்கு இது ஒரு புதிதாகவும் அதே சமயம், மகிழ்ச்சியை கொடுக்கும் என்று நம்புகிறேன் . இந்த படத்தின் டைட்டில் மாஸாக இருக்கும். இந்த தீபாவளி நம்ம தீபாவளியாக இருக்கும் என்று லெஜண்ட் சரவணா கூறியுள்ளார்.#TheLegendInAFamilyFunction 🌟தீபாவளி வெளியீட்டை நோக்கி இறுதி கட்ட படப்பிடிப்பு…#TheLegendsNextUpdate 🔥#TheLegend #LegendSaravanan @yoursthelegend @Dir_dsk pic.twitter.com/xtbIKBcLuTதீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில், அவர்களுக்கு டப் கொடுக்கும் வகையில் லெஜண்ட் சரவணா தனது படத்தை களமிறக்க தயாராகி வருகிறார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன