Connect with us

இலங்கை

கனவென நினைத்து போதையில் கரண்டியை விழுங்கிய நபர்

Published

on

Loading

கனவென நினைத்து போதையில் கரண்டியை விழுங்கிய நபர்

மது போதையில் தேநீர் கலக்கும் கரண்டியைத் தற்செயலாக விழுங்கிய சீனாவை நேர்ந்த ஆண் ஒருவர், ஐந்து மாதங்களாக அதனைக் கனவென்றே நினைத்திருந்து வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்நிலையில், இம்மாதம் ஷாங்காய் ஸொங்ஷான் வைத்தியசாலைக்குச் சென்று ஒரு மருத்துவரைச் சந்தித்த போது  26 வயது அந்த நபர் உணவுண்டபோது கரண்டியை அவர் விழுங்கிவிட்டாரோ என அம்மருத்துவர்க்கு சந்தேகம் எழுந்ததுள்ளது.

Advertisement

ஆனால், 15 சென்டிமீட்டர் நீளக் கரண்டி அவர் வயிற்றினுள் இருந்ததை அம்மருத்துவர் கண்டறிந்தனர். அக்கரண்டி அவரது முன்சிறுகுடலில் ஆபத்தான நிலையில் சிக்கியிருந்ததுள்ளது.

அக்கரண்டியின் சிறு அசைவுகூட குடலைக் குத்திக் கிழித்து, இரத்தக்கசிவை ஏற்படுத்திவிடும் என்ற நிலையிலிருந்தத போதுதான், இவ்வாண்டு ஜனவரியில் அந்த நபர் தாய்லாந்து சென்றிருந்தபோது தமக்கு ஏற்பட்ட அனுபவம் நினைவிற்கு வந்ததுள்ளது.

மது அருந்தியிருந்த அவர், வாந்தி எடுப்பதற்காகத் தமது அறையிலிருந்த தேநீர் கரண்டியைப் பயன்படுத்தினார். அப்போது, தற்செயலாக அந்தப் பீங்கான் கரண்டியை அவர் விழுங்கிவிட்டது நினை வந்துள்ளதை வைத்தியரிடம் கூறியுள்ளார்.

Advertisement

ஆயினும், போதையில் இருந்ததால் அதனை உணராமல் அவர் ஆழ்ந்து உறங்கி மறுநாள் காலையில் எழுந்த பிறகும், போதை முழுவதும் தெளியாததால் கனவில் தாம் கரண்டியை விழுங்கிவிட்டதாக அவர் நம்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

வாந்தி எடுத்ததால் தமக்கு வயிறு இன்னும் சரியாகவில்லை என்று அவர் நினைத்தார்.

அடுத்த ஐந்து மாதங்களுக்கு அவருக்கு எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை.

Advertisement

இந்நிலையில், குறித்த நபரின் வயிற்றில் சிக்கியிருந்த கரண்டியை வெளியில் எடுப்பது அவ்வளவு எளிதானதாக இல்லை என்று மருத்துவர்கள் கூறினர்.

ஜூன் 18ஆம் திகதி ஒன்றரை மணி நேர அறுவை சிகிச்சைமூலம் அது அகற்றப்பட்டது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன