இலங்கை
தங்கம் விற்கும் விலையில் தங்கவீடு; சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை மின்னும் தங்கம்; வாயை பிளக்கும் இணையவாசிகள்!

தங்கம் விற்கும் விலையில் தங்கவீடு; சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை மின்னும் தங்கம்; வாயை பிளக்கும் இணையவாசிகள்!
தங்கம் விற்கும் விலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேசம் இந்தூரில் அமைந்துள்ள வீடே இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் தங்கத்தில் ஒளிர்கின்றதாம்.
24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரபல யூ டியூபர் ஒருவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.
இங்கு மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.
அந்த பிரம்மாண்ட வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன.
வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மின்னுகின்றன. சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன.
யூ டியூபர் வெளியிட்ட வீடியோவின் தொடக்கத்தில் வீட்டின் போர்டிகோ காண்பிக்கப்படுகிறது.
அந்த போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.
அடுத்ததாக வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறமை இணைய வாசிகளை திகைக்க வைத்துள்ளதுது.
இந்நிலையில் வீட்டின் உரிமையாளர் கூறும்போது,
“எங்கள் குடும்பத்தில் மொத்தம் 25 பேர் உள்ளோம். முதலில் ஒரு பெட்ரோல் நிலையத்தை நடத்தினோம். இதன்பிறகு அரசிடம் இருந்து ஒப்பந்தங்களை பெற்று சாலை, கட்டிடங்களை கட்டி கொடுத்தோம். தற்போது 300 அறைகள் கொண்ட பிரம்மாண்ட ஓட்டலை கட்டி வருகிறோம் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.