இலங்கை

தங்கம் விற்கும் விலையில் தங்கவீடு; சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை மின்னும் தங்கம்; வாயை பிளக்கும் இணையவாசிகள்!

Published

on

தங்கம் விற்கும் விலையில் தங்கவீடு; சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை மின்னும் தங்கம்; வாயை பிளக்கும் இணையவாசிகள்!

தங்கம் விற்கும் விலையில் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி இணையவாசிகளை வாய் பிள்ளக்க வைத்துள்ளது. 

இந்தியாவின் மத்திய பிரதேசம் இந்தூரில் அமைந்துள்ள வீடே இவ்வாறு திரும்பும் இடமெல்லாம் தங்கத்தில் ஒளிர்கின்றதாம்.

Advertisement

24 கேரட் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடியோவை பிரபல யூ டியூபர் ஒருவர் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ அனைத்து சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

இங்கு மின்சார சுவிட்ச் முதல் வாஷ் பேசின் வரை அனைத்து பொருட்களும் 24 கேரட் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

Advertisement

அந்த பிரம்மாண்ட வீட்டில் விசாலமான 10 படுக்கை அறைகள் உள்ளன.

வீட்டின் பிரதான இடங்களில் தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலைகள் மின்னுகின்றன. சில நாற்காலிகளும் தங்கத்தில் தயாரிக்கப்பட்டு உள்ளன.

யூ டியூபர் வெளியிட்ட வீடியோவின் தொடக்கத்தில் வீட்டின் போர்டிகோ காண்பிக்கப்படுகிறது.

Advertisement

அந்த போர்டிகோவில் 1936-ம் ஆண்டு மெர்சிடஸ் கார் முதல் அண்மையில் அறிமுகமான அனைத்து கார்களும் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

அடுத்ததாக வீட்டுக்குள் நுழைந்தால் எங்கு பார்த்தாலும் தங்கம் ஜொலிக்கிறமை இணைய வாசிகளை திகைக்க வைத்துள்ளதுது.

இந்நிலையில் வீட்​டின் உரிமை​யாளர் கூறும்​போது,

Advertisement

“எங்​கள் குடும்​பத்​தில் மொத்​தம் 25 பேர் உள்​ளோம். முதலில் ஒரு பெட்​ரோல் நிலை​யத்தை நடத்​தினோம். இதன்​பிறகு அரசிடம் இருந்து ஒப்​பந்​தங்​களை பெற்று சாலை, கட்​டிடங்​களை கட்டி கொடுத்​தோம். தற்​போது 300 அறை​கள் கொண்ட பிரம்​மாண்ட ஓட்​டலை கட்டி வரு​கிறோம் என்று தெரி​வித்​தார்.

இந்நிலையில்  தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடு சமூகவலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version