இலங்கை
உடலில் கொலஸ்ட்ரால் இருக்கா? தவறியும் இந்த உணவுகளை காலையில் சாப்பிடாதீங்க!

உடலில் கொலஸ்ட்ரால் இருக்கா? தவறியும் இந்த உணவுகளை காலையில் சாப்பிடாதீங்க!
நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்பாக இருக்க காலை உணவு அவசியம். சில காலை உணவுகள் சத்தானது போல் தோன்றலாம். ஆனால் அவை கொலஸ்ட்ரால் நிறைந்தவையாக இருக்கலாம். இதனால் இதய நோய் ஆபத்து அபாயமும் உண்டு.
அதிலும் ஏற்கனவே உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகமாக இருப்பவர்களுக்கு இந்த அபாயம் இன்னும் அதிகம். அப்படி நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்பதை நாம் இங்கு பார்க்கலாம்.
பலர் காலை உணவில் வெள்ளை பிரட் மற்றும் பன் சாப்பிடுகிறார்கள். இது சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவில் செய்யப்படுகின்றன. இது இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். அதிக கொலஸ்ட்ரால் உண்டு செய்யும்.
இந்த சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளில் சத்துக்கள் குறைவு. வெறும் கலோரிகளை மட்டுமே தருகின்றன. இதனால் எடையும் அதிகரிக்கலாம். காலை உணவுக்கு ஆரோக்கியமான சுண்டல் வகைகள், பழங்கள், ஸ்மூத்தி போன்றவற்றை எடுத்துகொள்ளலாம்.
காலை வேளையில் பூரி சாப்பிட நன்றாக தான் இருக்கும். ஆனால் எண்ணெயில் பொரித்த உணவுகள் எதுவுமே உடலுக்கு ஆரோக்கியமானது கிடையாது. இவை சுவையை கொடுத்தாலும் தவிர்ப்பது தன் நல்லது.
எண்ணெயில் பொரித்த உணவில் அதிக சாச்சுரேட்டட் கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளது. இது எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பை அதிகரித்து கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தலாம்.
காலை வேளையில் பொரித்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது.
பலர் காலை உணவில் பால், சீஸ், அல்லது க்ரீம் சேர்ப்பதும் உண்டு. உங்கள் உணவு பழக்கத்திலும் இவை இருந்தால் முதலில் நிறுத்திவிடுங்கள். ஏனெனில் இது சாச்சுரேட்டட் கொழுப்பு கொண்டவை. இது உடலில் கொலஸ்ட்ரால் அளவை உயர்த்தும் என்று அறியப்படுகிறது.
காபி, டீ போன்றவற்றில் பால் சேர்ப்பது வழக்கம். இவை பிரச்சனை இல்லை. ஆனால் சீஸ், க்ரீம் போன்றவற்றை எந்த வகையிலும் சேர்க்க வேண்டாம். பால் பொருள்கள் விரும்பினால் தயிர் அதனுடன் பழங்கள் சேர்த்து சாப்பிடலாம். இது குடல் ஆரோக்கியத்துக்கும் செரிமானத்துக்கும் நன்மை செய்யும்.
பேக்கரி உணவுகள் சுவையானவை. மறுக்காமல் சாப்பிடுவாரக்ள். ஆனால் இதில் டிரான்ஸ் கொழுப்புகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட மாவு அதிகம். இது உடலில் எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்பின் அளவை உயர்த்தும்.
இது இதய நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும். உடல் கொலஸ்ட்ரால் கொண்டிருப்பவர்கள் இத்தகைய உணவை சாப்பிடவே கூடாது.
இந்த தானியங்களில் அதிக சர்க்கரை மற்றும் செயற்கை நிறமிகள் உள்ளன. இது உடலில் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரித்து, நல்ல HDL கொழுப்பின் அளவை குறைக்கிறது.
அதிக சர்க்கரை உணவுகள் உடலில் வீக்கத்தை உண்டாக்கும். இது இதய நோய்க்கு முக்கிய காரணம். உடலில் கொலஸ்ட்ரால் பாதிப்பு இருப்பவர்கள் இத்தகைய உணவுகளை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.