இலங்கை
கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி

கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் பலி
தம்மன்னாவ பிரதேசத்தில் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கிரிபாவ பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (01) மாலை இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் தம்மன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதுடையவர் ஆவார்.
இவர் தம்மன்னாவ பிரதேசத்திற்கு சென்றிருந்த போது வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக பயன்படுத்தப்படும் கட்டுத் துப்பாக்கி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிபாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.